Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: 4வது தோல்வியை தழுவிய சிஎஸ்கே.. தோனி, கான்வே அதிரடி வீண்.. தோல்விக்கான காரணம் என்ன?

சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. சிஎஸ்கே அணி இம்முறை கோப்பையை ஆறாவது முறையாக வென்று தோனிக்கு வெற்றியுடன் வழியனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்தால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதுவரை சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் விளையாடி நான்கு தோல்வி, ஒரு வெற்றி மட்டும் பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றது. இனி சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் எஞ்சி இருக்கும் ஒன்பது போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.

CSK vs PBKS

அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என தெரிகிறது. சிஎஸ்கே அணியில் பல பிரச்சனைகள் இருக்கிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்ய அணி நிர்வாகமும் முன் வருவதில்லை. முதலில் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பந்து வீச பணிக்கப்பட்டது. சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டத்தில் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், 24 வயது வீரரான்ஸ் ஆர்யா தனியாலாக நின்று சி எஸ் கே விற்கு ஆப்பு அடித்து விட்டார்.

பிரியன்ஸ் ஆர்யா சிஎஸ்கேவின் பந்துவீச்சை சுளுக்கு எடுத்தார். முன்பெல்லாம் விக்கெடுகள் விழுந்தால் பேட்ஸ்மேன்கள் தற்காப்பு ஆட்டத்தை ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் எடுக்க பார்ப்பார்கள். ஆனால் தற்போது கிரிக்கெட் மாறி வருவதால் பிராயன்ஸ் ஆர்யா தன்னுடைய இயல்பான ஆட்டத்தை தொடர்ந்து அதிரடியாக ஆடினார். அணி 154 ரன்கள் எடுத்திருந்தபோது பிரியன்ஸ் ஆர்யா மட்டும் தனியாளாக 103 ரன்கள் எடுத்தார். நடுவரிசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மார்க்கஸ் ஸ்டோனிஸ், நெஹல் வதேரா மேக்ஸ்வெல் ஆகியோர் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தொடக்க வீரர் பிராம்சிம்ரன் சிங் வெளியேறினார். ஆனால் பிரயான்ஸ் ஆர்யா மட்டும் அதிரடி காட்டினார். இதில் சிஎஸ்கே அணி பல கேட்ச் வாய்ப்புகளையும் தவறவிட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது. குறிப்பாக கீழ் வரிசையில் ஷசாங் சிங் 36 பந்துகளின் 52 ரன்கள் அடித்தார். இதில் மூன்று சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் அடங்கும். இதேபோன்று மார்க்கரம் 19 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் அடங்கும்.

இதன் மூலம் சிஎஸ்கே அணி 220 ரன்கள் ஷேஸ் செய்ய வேண்டும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. இந்த பந்து வீச்சிலும் கேப்டன் ருதுராஜ் ஒரு மிகப்பெரிய சொதப்பலை செய்து வருகிறார். அதாவது ஒரு ஃபார்முலா டெம்ப்ளேட்டை உருவாக்கி என்ன ஆனாலும் நான் அதுபடி தான் நடப்பேன் என்பது போல் அவர் விளையாடி வருகிறார். அஸ்வின் தொடர்ந்து பவர் பிளேவில் அடி வாங்கிக் கொண்டிருக்கின்றார். அஸ்வின் வீசிய ஒரு ஓவரில் மட்டும் இருபது ரன்களுக்கு மேல் சென்றது.

இதனால் ஒட்டுமொத்தமாக அவருடைய பௌலிங் ஸ்பெல் பாதிக்கப்படுகிறது. இதனால் அஸ்வினை பவர் பிளேவில் பயன்படுத்தக் கூடாது என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். ஆனால் நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன் என்பது போல் ருதுராஜ் தொடர்ந்து அஸ்வினை பயன்படுத்தி அடி வாங்கிக் கொண்டிருக்கின்றார்.

இந்தத் திட்டத்தை சிஎஸ்கே அணி கைவிட வேண்டும். நூர் அகமது போன்ற வீரரை ஆவது பவர் பிளேவில் ஒரு ஓவர் வழங்கலாம். இல்லையென்றால் சிஎஸ்கே அணியில் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களே வைத்து பவர் பிளேவை முடிக்கலாம். அதுவும் இல்லை என்றால் பதிரானாவை பவர் பிளேவில் ஒரு ஓவர் வீச வைக்கலாம். பதிரானா 4 ஓவரில் 52 ரன்களை விட்டுக் கொடுத்தது சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அவர் குறைந்தபட்சம் ஒரு 10, 15 ரன்கள் குறைவாக கொடுத்திருந்தாலும் கூட சிஎஸ்கே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கும்.

சிஎஸ்கே அணியின் அடுத்த சிக்கலே பேட்டிங் வரிசைதான். சிஎஸ்கே அணியின் பேட்டிங்கில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் பேட்டிங் வரிசையில் தான் பிரச்சனை இருக்கின்றது. குறிப்பாக ருதுராஜ் தொடக்க வீரராக விளையாடும் போது தான் அதிரடி காட்டி ரன்களை சேர்த்து வருகிறார். ஆனால் அவரை தேவையில்லாமல் மூன்றாவது வீரராக களம் இறக்கி தோல்விக்கு முக்கிய காரணமாக அது அமைந்து விடுகிறது. தனது தொடக்க வீரர் என்ற இடத்தை விட்டு வேறு இடத்திற்கு ருதுராஜ் எப்போது சென்றாரோ அப்போதிலிருந்து சிஎஸ்கே அணிக்கு ஏழரை சனி ஆரம்பித்துவிட்டது.

இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு ஒரே ஒரு நல்ல விஷயம் நடந்தது. இந்த ஆட்டத்திற்கு முன்பு வரை கடந்த நான்கு போட்டிகளிலும் தொடக்க வீரர்கள் அதிகமாக சேர்த்த ஸ்கோரே 18 ரன்கள் தான். ஆனால் இன்று ரச்சன் ரவீந்திரா,கான்வே ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்திருந்தார்கள்.
இந்த ஜோடி தங்களது ரன்குவிக்கும் வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்தபோது ஆட்டம் இழந்தது சரி மூன்றாவது வீரராக களம் இறங்கிய ருதுராஜ் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனால் ருதுராஜ் தயவுசெய்து தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதே போன்று சிவம் துபே இன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டு சிக்ஸர், 3 பவுண்டரி என 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தபோது முக்கியமான கட்டத்தில் ஆட்டம் இழந்தார். அதேபோன்று இன்றைய ஆட்டத்தில் தோனி மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி என 12 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். ஆனால் கடைசி இரண்டு ஓவர்களில் 40 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதெல்லாம் கம்ப்யூட்டர் வீடியோ கேமில் கூட முடியாது.

இதேபோன்று ஜடேஜா கீழ் வரிசையில் விளையாடுகிறார். ஜடேஜா பேட்டிங் வரிசையில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்திற்கு களமிறங்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி சிஎஸ்கே அணியில் பேட்டிங் வரிசையில் ஒரு சில மாற்றங்களை நிகழ்த்தினாலே இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெறும். ஆனால் எதையும் செய்யாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சிஎஸ்கே சாதித்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இவ்வளவு தவறுகள் நிகழ்ந்தும் கூட சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எட்டியது. இந்த போட்டியில் இரு அணிகளும் கேட்ச் விடுவதில் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டனர்.

Story first published: Tuesday, April 8, 2025, 23:37 [IST]
Other articles published on Apr 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+