Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- ராஜஸ்தான் மீண்டும் தோல்வி.. 2வது இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப் அணி

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான 59வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் பிரியான்ஸ் ஆர்யா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்

இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் பிரியான்ஸ் ஆரியா ஒன்பது ரன்களிலும், மிச்சில் ஓவன் டக்அவுட் ஆகியும் வெளியேற பிராப்சிம்ரன் சிங் 10 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.

PBKS vs RR

மறுமுனையில் அதிரடி காட்டிய நெஹல் வதேரா 25 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதேபோன்று கீழ் வரிசையில் ஷசாங் சிங் 27 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க ஷசாங் சிங் 30 பந்துகளில் 59 ரன்களும் எடுக்க இறுதியில் அஸ்மதுல்லாஹ் உமர்சாய் 9 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார்.

இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்ப முதலில் அதிரடியை காட்டியது. ஜெய்ஸ்வால் மற்றும் 14 வயது வீரரான வைபவ் சூரியவன்சி அபாரமாக விளையாடி பவர் பிளேவில் ரன்களை குவித்தனர். வழக்கம் போல் அதிரடி கட்டிய வைபவ் சூர்யவம்சி 15 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர்கள் அடங்கும்.

இதனால் ராஜஸ்தான் அணி பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதை அடுத்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் 16 பந்துகளில் 20 ரன்களும், ரியான் பராக் 11 பந்துகளில் 13 ரன்களும் எடுக்க சிம்ரன் ஹெட்மயர் 11 ரன்கள் எடுத்து மீண்டும் சொதப்பினார்.

ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும், துருவ் ஜூரல் மட்டும் கடைசி வரை போராடி 31 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணி பந்துவீச்சு தரப்பில் ஹர்ப்ரிப் பிராட் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் 17 புள்ளிகள் பெற்று பஞ்சாப் அணி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

Story first published: Sunday, May 18, 2025, 19:48 [IST]
Other articles published on May 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+