சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் யாருமே நினைக்காத வகையில் வெறும் 112 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்து பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டாலும் அதனை அணிகள் வெற்றிகரமாக சேஸ் செய்து வரும் நிலையில் 112 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டிருக்கிறது.
இதனால் ரசிகர்கள் அனைவரும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை மக்கள் கேப்டன் என்று பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், என்னால் மகிழ்ச்சியை வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை.

என்னால் பேசக்கூட முடியவில்லை. இந்த வெற்றியை நம்ப முடியவில்லை. பந்து ஆடுகளத்தில் நன்றாக திரும்பியதை நான் கவனித்தேன். இதனால் சாகலிடம் சென்று பதற்றம் அடையாமல் மூச்சை நன்றாக இழுத்து விட்டு அமைதியாகும் படி கூறினேன். குறைவான இலக்கை எடுத்ததால் ஆரம்பத்தில் இருந்து நாம் அட்டாக் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேன்.
நான் பேட்டிங் செய்யும்போது இரண்டு பந்துகளை தான் எதிர்கொண்டேன்.ஒரு பந்து பவுன்ஸ் மிகவும் குறைவாக இருந்தது. இன்னொரு பந்து நன்றாக எகிறியது. இதை பார்த்த உடனே ஆடுகளத்தின் பவுன்ஸ் நிலையற்ற தன்மையில் இருப்பதை உணர்ந்தேன். நாங்கள் 16 ரன்களில் வெற்றி பெற்றிருப்பதை பார்க்கும்போது டீசன்ட்டான இலக்கை தான் நாங்கள் எட்டிருக்கிறோம் என்று நினைக்கின்றேன்.
இந்த ஆடுகளத்தில் பவுன்ஸ் ஒரே மாதிரி இல்லை. இதை போல் இரண்டு ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை நாங்கள் எடுத்த பிறகு உத்வேகம் எங்களிடம் வந்தது. எனினும் கொல்கத்தா அணியின் இரண்டு பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடி ஆட்டத்தை அவர்களிடம் இழுத்துச் சென்றார்கள்.
ஆனால் சாகல் தன்னுடைய அபாரமான பந்து வீச்சு மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறார்.
இன்னும் அவர் வரும் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசுவார் என நம்புகின்றேன். ரன்கள் குறைவாக எடுத்திருந்ததால் நான் பில்டர் விழிப்புணர்வுடன் அட்டாக் செய்ய வேண்டும் என்று கூறினேன். இதன் மூலம் கே கே ஆர் பேட்டர்ஸ்கள் விதவிதமான ஷாட்களை ஆடினார்கள். போட்டியில் வெற்றி எங்களை நோக்கி வந்ததை உணர்ந்தேன். இந்த வெற்றியின் மூலம் துள்ளி குதிக்காமல் நிச்சயம் அடக்கமாக நடந்து கொள்வோம். இந்த வெற்றி எங்களின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது என்று ஸ்ரேயாஸ் கூறியுள்ளார்.