For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: ஐபிஎல் வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை.. படுமோசமான ரெக்கார்டை செய்த பஞ்சாப் கிங்ஸ்

முல்லான்பூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. இந்தப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத சில மோசமான சாதனைகளைப் படைத்துள்ளது.

2010 முதல் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் மிகக் குறைந்த ஸ்கோர் என்பது பஞ்சாப் கிங்ஸ் அணி இந்தப் போட்டியில் எடுத்த 101 ரன்கள் தான். இதற்கு முன், 2010 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெறும் 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது.

IPL 2025 Punjab Kings unwanted milestones and Royal Challengers Bangalore creates new records in playoff

அப்போது மூன்றாவது இடத்திற்கான போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி இவ்வாறு மோசமாக ஆடியது. அப்போதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 82 ரன்களுக்கு சுருட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 101 ரன்களுக்குள் சுருட்டியிருக்கிறது.

மேலும், இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்று வரலாற்றில் எதிரணியை 15 ஓவர்களுக்குள் ஆல் அவுட் ஆக்கிய சாதனையைப் படைத்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இதற்கு முன், 2008 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணி 16.1 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருந்தது. அதுவே ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் மிகக் குறைந்த ஓவர் மட்டுமே களத்தில் நின்ற ஒரு அணியின் மோசமான ரெக்கார்டாக இருந்தது. அதை தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி முறியடித்துள்ளது.

மேலும், ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் முழுமையாக 20 ஓவர்கள் நடந்த போட்டி ஒன்றில், வெற்றி இலக்கை 10 ஓவர்களுக்குள் எட்டிய முதல் அணி என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி செய்துள்ளது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 102 ரன்கள் என்ற இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சரியாக 10 ஓவர்களில் எட்டி இந்த சாதனையைப் படைத்திருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துவக்க வீரர் ஃபில் சால்ட் அபாரமாக விளையாடி 27 பந்துகளில் 56 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Friday, May 30, 2025, 7:25 [IST]
Other articles published on May 30, 2025
English summary
IPL 2025: Punjab Kings' unwanted milestones and Royal Challengers Bangalore creates new records in playoff
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+