For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025:மும்பை அணியை எலிமினேட்டருக்கு அனுப்பிய பஞ்சாப்..குவாலிபையர் 1-க்கு தகுதி பெற்ற ஸ்ரேயாஸ் படை

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் முதல் குவாலிபையரில் யார் விளையாடப் போகிறார் என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் வெற்றி பெறும் அணி முதல் குவாலிபையர் போட்டிக்கு தகுதி பெறும் என்ற நெருக்கடி இருந்தது.

இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து விஜய் தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர் ரியன் ரிக்கல்டன் 27 ரன்களும், ரோகித் சர்மா 24 ரன்களும் எடுத்தனர்.

MI vs PBKS

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா ஒரு ரன்னில் வெளியேற மும்பை அணி தடுமாறியது. இதேபோன்று வில் ஜாக்ஸ் 8 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்த நிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்கள் நம்பி நிலையில் அவரும் காலை வாறினார்.

வழக்கம் போல் மும்பை அணி தடுமாறிய நிலையில் சூரிய குமார் யாதவ் தான் மீண்டும் ஒரு முறையை அணியை காப்பாற்றினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு ஹர்திக் பாண்டியா நமன் தீர் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். ஒரு கட்டத்தில் சூரிய குமார் தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தினார். இதெல்லாம் மும்பை இந்தியன்ஸ் அனியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

39 பந்துகளுக்கு எதிர்கொண்ட சூரியகுமார் 57 ரன்கள் சேர்த்த நிலையில் ஆறு பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் அடங்கும். ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, நமன் தீர் 12 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

முதல் 10 ஓவரில் தடுமாறிய மும்பை அணி கடைசி பத்து ஓவரின் 101 ரன்கள் எடுத்து கௌரவமான இலக்கை எட்டியது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக விளையாடிய இளம் வீரர் பிரியான்ஸ் ஆர்யா வழக்கம் போல் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒன்பது பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களை விளாசிய அவர் 35 பந்தில் 62 ரன்கள் குவித்தார்.

பிராப்சிம்ரன் சிங் 13 ரன்களில் வெளியேறினாலும் பஞ்சாப் அணிக்கு கடைசியில் வந்து சேர்ந்த ஜோஸ் இங்கிலீஷ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒன்பது பவுண்டரி, மூன்று சிக்சர் என 42 பந்துகளில் 73 ரன்கள் குவித்து மும்பை அணியின் கதையை தனியாளாக அவர் முடித்தார்.

எனினும் இறுதியில் ஸ்ரேயாஸ் ஐயர், மும்பை அணியின் சவப்பெட்டிக்கு கடைசி ஆணியை தனது பேட்டிங் மூலம் அடித்தார். 16 பந்துகளில் அவர் 26 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடங்கும். இதன் மூலம் பஞ்சாப் அணி 18.3 ஓவரில் மூன்று விக்கெட்டுகள் இழந்து 157 ரன்கள் எட்டியது.

ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதல் இடத்தை பிடித்தது. இதனால் பிளே ஆப் சுற்றில் முதல் குவாலிபயர் போட்டியில் பஞ்சாப் அணி இடம் பெற்றது. மும்பை அணி தற்போது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு எலிமினேட்டர் போட்டியில் விளையாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Story first published: Monday, May 26, 2025, 23:32 [IST]
Other articles published on May 26, 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+