முல்லான்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். 2025 ஐபிஎல் தொடரின் 18 வது லீக் போட்டி முல்லான்பூரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் கிங்ஸ் அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்த போட்டிக்கான பிட்ச் அதிக புற்களுடன் கடினமாக இருந்ததால் டாஸ் பெரிய முக்கியத்துவம் பெறாது என நம்பப்படுகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் மீண்டும் திரும்பினார். முதல் மூன்று போட்டிகளில் ரியான் பராக் அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருந்தார்.
சஞ்சு சாம்சன் இம்பேக்ட் வீரராக மட்டுமே விளையாடி வந்தார். தற்போது அவர் விக்கெட் கீப்பிங் செய்ய பிசிசிஐ அனுமதி அளித்ததை எடுத்து தற்போது அவர் கேப்டனாக அணிக்கு திரும்பி இருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவன் பின்வருமாறு: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (தலைவர் & விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மையர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹேஷ் தீக்ஷனா, யுத்வீர் சிங் சரக், சந்தீப் சர்மா
இந்த அணிக்கு குணால் சிங் ரத்தோர், ஷுபம் துபே, ஃபசல்ஹக் ஃபாரூக்கி, குமார் கார்த்திகேயா மற்றும் ஆகாஷ் மத்வால் ஆகியோர் இம்பேக்ட் வீரர்களாக இருப்பார்கள்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் பின்வருமாறு: பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், நெஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், சூர்யான்ஷ் ஷெட்கே, மார்கோ ஜேன்சன், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல்.
இந்த அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா, ஹர்ப்ரீத் பிரார், பிரவீன் துபே, விஷ்ணு வினோத் மற்றும் வைஷாக் விஜயகுமார் ஆகியோர் இம்பேக்ட் வீரர்களாக இருப்பார்கள்.