Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: 150 கிமீ வேகத்தில் பந்துவீசும் வீரரை களமிறக்கிய கொல்கத்தா.. டாசில் தவறு செய்தாரா ஸ்ரேயாஸ்

சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 31-வது லீக ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் சந்திகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரிட்சை நடத்துகிறது. கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திலும், பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திலும் இருக்கின்றது.

சிஎஸ்கே அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் பங்கேற்கிறது. இந்த சூழலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்திருக்கிறது. பனிப்பொழிவு இருக்கும் பட்சத்தில் அனைவரும் பந்து வீச தான் முடிவெடுப்பார்கள்.

KKR vs PBKS

ஆனால் ஸ்ரேயாஸ் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடிவெடுத்து இருப்பது ரசிகர்களிடையே கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ், நான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தேன். கடந்த இரண்டு போட்டிகளில் இங்கு விளையாடி இருக்கின்றோம்.

இதனால் ஆடுகளம் எங்களுக்கு பழகியிருக்கிறது. பனிப்பொழிவு இருக்கு செய்கிறது. ஆனால் அது ஆடுகளத்தில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இன்று நான் அணியில் என்ன மாற்றம் செய்திருக்கிறேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை உங்களிடம் பின்னர் தெரிவிக்கின்றேன். நாங்கள் பீல்டிங்கில் கேட்ச்களை அதிக அளவில் பிடிக்க வேண்டும். சிறந்த கேட்சுகளை பிடித்தால்தான் போட்டியில் வெற்றி பெற முடியும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய கொல்கத்தா அணி கேப்டன் ரஹானே, நாங்கள் முதலில் இந்த ஆடுகளத்தில் பந்து வீச தான் தேர்வு செய்ய இருந்தோம். தற்போது நினைத்த முடிவே கடைத்திருக்கிறது. எனினும் டாசை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. பஞ்சாப் அணி எந்த இலக்கை நிர்ணயிக்கிறதோ அதனை சேஸ் செய்யக்கூடிய பேட்டிங் வரிசை எங்களிடம் இருக்கின்றது.

எங்கள் அணியில் இன்று மோயின் அலிக்கு பதிலாக ஆண்டிரிச் நோக்கியா களமிறங்குகிறார். தன்னுடைய உடல் தகுதியை மீட்க அவர் கடுமையாக போராடி வந்தார். அவர் எப்படி பந்து வீசப் போகிறார் என பார்க்க நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றேன் என்று ரஹானே கூறியுள்ளார். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர். காயம் காரணமாக சில காலம் விளையாடாமல் இருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் களத்திற்கு திரும்பிருக்கிறார்.

Story first published: Tuesday, April 15, 2025, 19:21 [IST]
Other articles published on Apr 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+