ஐபிஎல் 2025: ஊதா தொப்பியை தட்டித் தூக்கிய சிஎஸ்கே பவுலர்.. எத்தனை விக்கெட் வீழ்த்தினார்?
அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான ஊதா நிற தொப்பி யாருக்கு வழங்கப்படுகிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாம். 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதன் முடிவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த நூர் அகமது ஆவார்.
நூர் அகமது சிஎஸ்கே அணியின் முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். அவர் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்திலும் மற்றொரு சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளரே இடம் பெற்றுள்ளார். இந்த ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் கலீல் அகமது 3 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் 29 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

மூன்றாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைச் சேர்ந்த க்ருனால் பாண்டியா இடம் பெற்றிருக்கிறார். அவரும் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் எடுத்திருந்தார். அடுத்து நான்காவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த சாய் கிஷோர் இருக்கிறார். அவர் 30 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.
ஐந்தாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அறிமுக வீரர் விக்னேஷ் புத்தூர் இருக்கிறார். அவர் 32 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்திருந்தார். ஆறு மற்றும் ஏழாவது இடத்தில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் துஷார் தேஷ்பாண்டே உள்ளனர். அவர்களும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இவர்களைத் தவிர்த்து மொத்தம் 11 பந்துவீச்சாளர்கள் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்த இடங்களில் உள்ளனர். சிஎஸ்கே அணியில் நூர் அகமது மற்றும் கலீல் அகமது ஆகியோர் அடுத்து வரும் போட்டியிலும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தினால், அவர்கள் இருவரில் ஒருவர் ஊதா நிற தொப்பியை நீண்ட காலத்திற்கு தக்க வைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
செய்தி சுருக்கம்:
- 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகள் முடிந்துள்ளன.
- நூர் அகமது (சிஎஸ்கே) 4 விக்கெட்டுகளுடன் ஊதா தொப்பி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
- இரண்டாவது இடத்தில் மற்றொரு சிஎஸ்கே வீரரான கலீல் அகமது உள்ளார்.
- க்ருனால் பாண்டியா (ஆர்சிபி), சாய் கிஷோர் (குஜராத் டைட்டன்ஸ்), விக்னேஷ் புத்தூர் (மும்பை இந்தியன்ஸ்) ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
- மிட்செல் ஸ்டார்க் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோரும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
- மேலும் 11 பந்துவீச்சாளர்கள் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications