Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: PBKS or RCB? முதல் குவாலிபையரில் வெல்லப்போவது யார்? தமிழக வீரர் அஸ்வின் கணிப்பு

சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் முதல் குவாலிபயர் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. சண்டிகாரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஆர் சி பி மற்றும் பஞ்சாப் அணி பலப் பரிட்சை நடத்துகிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், "முதலில் ஆர் சி பி அணியில் இடம் பெற்றதற்கும் மாயங் யாதவுக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உள்நாட்டு போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆனால் ஏலத்தில் அவரை வாங்க யாருமே முன்வரவில்லை."

IPL Playoff

"பலர் என்னிடமே மாயங் அகர்வால் சேர்த்து இருக்கக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால் ஆர்சிபி அணி அவரை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறது. பஞ்சாப் அணி அனைத்து விஷயங்களிலும் சரியாக இருக்கிறது. எனவே அவர்கள் வீழ்த்துவது கொஞ்சம் சவாலான காரியம்தான். எனினும் மாயங் அகர்வால் அணியில் இல்லை."

"இதுபோன்று ஆர்சிபி அணியிலும் சில பிரச்சனைகள் இருக்கின்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களை ஆர்சிபி எவ்வாறு கையாள போகிறது என்பதை பொறுத்து போட்டியின் முடிவு இருக்கும். என்னை கேட்டால் ஆர் சி பி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றால் நான் ஒன்றும் ஆச்சரியப்பட மாட்டேன்."

"என்னுடைய உள்ளுணர்வு ஆர்சிபி தான் இன்று வெற்றி பெறும் என்று சொல்கின்றது. ஆனால் ஸ்ரேயாஸ் படையை சாதாரணமாக நினைக்கக் கூடாது. அவர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து இருக்கிறார்கள். குறிப்பாக ஸ்ரேயாஸ் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து தற்போது தனது தலைமையை நிரூபித்து இருக்கிறார்."

"நீங்கள் பஞ்சாப் குஜராத் அல்லது ஆர் சி பி என ரசிகர்களாக இருக்கலாம். ஆனால் யாருமே மும்பை அணியை பிளே ஆப்பில் எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள். அதுதான் உண்மை.மும்பை விட குஜராத் சில போட்டிகளில் நன்றாக செயல்பட்டு இருக்கலாம். ஆனால் மும்பை, குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணியுமே சரி பலம் கொண்ட அணியாக தான் இருக்கும். ஆனால் நான் ஆர் சி பி அல்லது பஞ்சாப் ரசிகனாக இறுதிப்போட்டியில் இருந்தால் நிச்சயமாக நான் மும்பையை எதிர்கொள்ள விரும்ப மாட்டேன்" என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 29, 2025, 16:09 [IST]
Other articles published on May 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+