Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs RR: மாபெரும் வரலாறு படைத்த குவின்டன் டி காக்.. 97 ரன்கள் குவித்து பல்வேறு சாதனைகளை உடைத்தார்

கவுஹாத்தி: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள குவிண்டன் டி காக், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 61 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். இதன் மூலம் மிகப்பெரிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்தப் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இரண்டாவது சொந்த மைதானமான கவுகாத்தியில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் டி காக அடித்த 97 ரன்கள் என்பதே மிகப்பெரிய தனிநபர் ஸ்கோர் ஆகும். இதற்கு முன் ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடியபோது ஒரு போட்டியில் 86 ரன்கள் அடித்திருந்தார். அது 2023 ஐபிஎல் தொடரில் நிகழ்ந்தது.

IPL 2025 Quinton de Kock s breaks multiple records with 97 runs against Rajasthan Royals

அதன்பிறகு கவுஹாத்தி மைதானத்தில் மிகப்பெரிய ஸ்கோரை அடித்திருக்கிறார் குவிண்டன் டி காக். மேலும், கவுகாத்தி மைதானத்தில் ஒரே போட்டியில் 90 ரன்களுக்கும் அதிகமாக ரன் சேர்த்த அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக கவுகாத்தி மைதானத்தில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் ஜோஸ் பட்லர் இடம்பெற்று இருக்கிறார். அவர் இரண்டு போட்டிகளில் விளையாடி 98 ரன்கள் எடுத்திருக்கிறார். குவிண்டன் டி காக் ஒரு போட்டியில் மட்டும் விளையாடி 97 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

மூன்றாவது இடத்தில் ஷிகர் தவான் இருக்கிறார். அவர் 86 ரன்கள் எடுத்து இருக்கிறார். இதைத் தவிர, ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 90 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை எடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் குவிண்டன் டி காக் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் கே.எல்.ராகுல் இருக்கிறார். அவர் ஆறு முறை 90 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை ஐபிஎல் தொடரில் எடுத்து இருக்கிறார். குவிண்டன் டி காக் மூன்று முறை 90 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை எடுத்து இரண்டாவது இடத்தில் இடம் பெற்று இருக்கிறார்.

ஆடம் கில்கிறிஸ்ட், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, ரிஷப் பண்ட் மற்றும் விருத்திமான் சாஹா ஆகியோர் தலா இரண்டு முறை 90 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை எடுத்துள்ளனர்.

செய்தி சுருக்கம்:

  • குவிண்டன் டி காக் 61 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார்.
  • கவுகாத்தி மைதானத்தில் இதுவே அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
  • 90 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
  • கவுகாத்தி மைதானத்தில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம்.
  • ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 90 ரன்களுக்கு மேல் அடித்த விக்கெட் கீப்பர் பட்டியலில் இரண்டாவது இடம்.
Story first published: Thursday, March 27, 2025, 9:52 [IST]
Other articles published on Mar 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+