Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- இனி பவுலர்கள் அனைவரும் மனோதத்துவ மருத்துவர்கள் வைத்து கொள்ளுங்கள்.. அஸ்வின் கருத்து

சென்னை: ஐபிஎல் தொடர் தற்போது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறி வருவதாக பெரும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இம்பேக்ட் வீரர் மூலம் கூடுதல் பேட்ஸ்மேன்கள் களமிறக்கப்படுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஆடுகளமும் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது.

இதனால் பவுலர்கள் அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. தற்போது நடைபெற்ற முதல் வாரத்தில் கூட வெறும் இரண்டு போட்டிகள் மட்டும் தான் 200 ரன்கள் மேல் அடிக்கப்பட்டது. அதிலும் ஆர்சிபி, கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டத்தில் 175 ரன்கள் என்று இலக்கை ஆர் சி பி அணி 16.2 ஓவர்களில் எல்லாம் எட்டியது.

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 286 ரன்கள் குவிக்கும். வெறும் 41 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவியது. அதேபோன்று லக்னோ அணி நிர்ணயித்த 210 என்று ஸ்கோரை டெல்லி அணி எட்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தும் இம்பேக்ட் விதியின் மூலம் வெற்றியை பெற்றது.

இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்த ரபடா கிரிக்கெட் என அழைப்பதற்கு பதில் வெறும் பேட்டர் என அழையுங்கள் என்று கோபமாக கூறியிருந்தார். தற்போது இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், இனி ஒவ்வொரு பவுலர்களும் தங்களுக்கு என தனியாக மனோதத்துவ மருத்துவர் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றேன்.

நான் உண்மையாகத்தான் சொல்கின்றேன். பவுலர்கள் தற்போது தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்துவதாக கூறுகிறீர்கள். ஆனால் தற்போது உள்ள கிரிக்கெட்டில் பந்துவீச்சு என்பது முடியாத காரியமாக மாறிவிட்டது. சில மைதானங்களில் எல்லாம் ஸ்டெம்புகள் எதற்கு இருக்கிறது என தெரியவில்லை. சாய் சுதர்சனுக்கு எதிராக சாகல் ஃபுல் டாஸ் வந்து ஒன்றை வீசினார்.

ஆனால் அதில் வெறும் ஒரு ரன் மட்டும்தான் அடிக்கப்பட்டது. இது ஒரு நல்ல விஷயமாக நான் பார்க்கின்றேன். ஏனென்றால் சில ஆடுகளங்களில் பந்து வீசும் போது பந்து ஆடுகளத்தில் பட்டு அது பேட்ஸ்மேன்களுக்கு சுலபமான பந்தாக மாறுகிறது. இப்படி இருக்கும் போது ஆடுகளத்தில் படாமல் புல் டாஸ் வீசும் போது அதனை பேட்ஸ்மேன்கள் அடிக்க சிரமப்படுகிறார்கள்.

இளம் வயதில் புல்டாஸ் வீசினால் பேட்ஸ்மேன்கள் அதனை அடித்து விடுவார்கள் என்று சொல்லி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆனால் தற்போது வழங்கப்படும் ஆடுகளங்களை பார்க்கும்போது புல்டாஸ் என்பது நல்ல பந்தாக எனக்குத் தெரிகிறது என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Thursday, March 27, 2025, 14:28 [IST]
Other articles published on Mar 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+