மும்பை : ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் எத்தனை வீரர்கள் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை விடுவிக்க வேண்டும் பின் விடுவித்த வீரர்கள் தங்களுக்கு வேண்டுமென்றால் ஆர்டிஎம் எனப்படும் வசதியை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தற்போது பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்கள். சிலர் ரைட் டூ மேட்ச் கார்டு என்ற முறையை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். RTM கார்ட் என்றால் உதாரணத்திற்கு சிஎஸ்கே அணிக்காக விளையாடிய சிவம் துபேவை சிஎஸ்கே விடுவித்து இருக்கிறது.

பின் மெகா ஏலத்தில் ஆர் சி பி அணியும், மும்பை அணியும் சிவம் துபேவை போட்டி போட்டு வாங்கு முயற்சிக்கிறது. அதில் எட்டு கோடி ரூபாய்க்கு சிவம் துபேரை ஆர் சி பி தேர்வு செய்வது என்றால் திடீரென்று சிஎஸ்கே உள்ளே வந்து RTM கார்டை பயன்படுத்தி தாங்கள் அதே எட்டு கோடி ரூபாய்க்கு சிவம் துபேவை எடுத்துக் கொள்கிறோம் என்று கூறலாம்.
இதன் மூலம் அணி பிளவுப்படாமல் ஒரே மாதிரியான வீரர்கள் தொடர்ந்து இருக்க உதவும். எனினும் இந்த முறைக்கு தற்போது தமிழகத்திற்கு வீரர் அஸ்வின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், ரைட் டு மேட்ச் கார்ட் என்ற விதியை உடனடியாக நீக்க வேண்டும். அது வீரர்களுக்கு நன்மையை கொடுப்பதை விட தீமை தான் அதிகமாக கொடுக்கின்றது.
உதாரணத்திற்கு நான் ஒரு அணியில் வேண்டும் என்றால் என்னை நான்கு பேர் தக்க வைக்கும் போது என்னையும் சேர்த்து தக்க வைத்துக் கொண்டிருக்க வேண்டும். என்னை வேண்டாம் என்று நீங்கள் முடிவு எடுத்து பிறகு தான் ஏலத்தில் விடுகிறீர்கள். அப்படி இருக்கும் போது மீண்டும் நானே வேண்டும் என்று எதற்கு கேட்கிறீர்கள்.
ஒரு வீரர் தேவையில்லை என்பதால் தான் நீக்கப்படுகிறார். அப்படி இருக்கும் போது அவரை மீண்டும் வேண்டும் என்று சொல்வதில் நியாயம் இல்லை. நீ என்ன எனக்கு அண்ணனா? தம்பியா? என்னை ரைட் டு மேட்ச் என்று கூறி மீண்டும் தேர்வு செய்ய உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இரு அணிகளும் போட்டி போட்டும் போது, அதில் ஒரு அணி ஏலத்தில் வெற்றி பெறுகிறார்கள். அப்படி இருக்கும் போது இன்னொரு அணி திடீரென்று நான் இந்த வீரரை தேர்வு செய்கிறேன் என கூறி, அதே பணத்தை கொடுக்க முன்வருவது ஏற்றுக்கொள்ள முடியாது.
RTM பயன்படுத்த வேண்டும் என்றால் கூடுதலாக பணத்தை அந்த வீரருக்கு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடருக்கான உரிமம் அதிகரிக்கப்படுகிறது. விமான போக்குவரத்து செலவு, ஹோட்டல்களில் தங்கும் செலவு உணவு என அனைத்துமே அதிகரிக்கிறது. உங்களுக்கான வருமானமும் கூடிக்கொண்டே செல்கிறது .ஆனால் வீரர்களுக்கு மட்டும் மூன்றாண்டுக்கு ஒரு முறை தான் சம்பளமா?
அது ஏற்றுக்கொள்ள முடியாது. வீரர்களுக்கும் ஆண்டு தோறும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். வீரர்களை நம்பி தான் ஐபிஎல் போட்டி இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு கூடுதல் சம்பளத்தை வழங்குங்கள் இதை நான் எனக்காக பேசவில்லை. நான் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தான் கிரிக்கெட் விளையாடுவேன். நான் இதை தற்போதுள்ள இளைஞர்களுக்காக பேசுகிறேன் என்று அஸ்வின் கூறியுள்ளார்.