சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அஸ்வினுக்கு பெருந்தொகை கொடுத்து வாங்கியது. அஸ்வின் பெரும் தாக்கத்தை இம்முறை ஏற்படுத்துவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நடப்பு ஐபிஎல் தொடரில் அஸ்வின் 7 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். குறிப்பாக பவர்பிளேவில் அஸ்வின் அதிக ஓவர்கள் வீச நேர்ந்தது. ஆனால், அதனை மற்ற பேட்டர்ஸ்கள் எளிதாக ரன்கள் அடித்து ஆதிக்கம் செலுத்தினார்.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹஸியை வைத்து சிஎஸ்கே அணி பயிற்சி தராமல், மைக் டெஸ்டிங் 123 என்ற போட்காஸ்ட் நிகழ்ச்சியை சிஎஸ்கே தொடங்கியுள்ளது. இது, புதிய முயற்சி என்றாலும், தொடரில் சொதப்பும் போது இது தேவையா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழாமல் இல்லை. இதில் முதல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அஸ்வினிடம், ஓய்வு முடிவு, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் உடனான அனுபவங்கள், மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் மறக்க முடியாத வெற்றி ஆகியவற்றைப் பற்றி பார்க்கிறோம் கேள்வி கேட்க்ப்பட்டது. அதை தற்போது பார்க்கலாம்.

ஓய்வு முடிவு: உணர்ச்சிகளின் உச்சம்:
"நூறாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன். ஆனால், சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் நன்றாக விளையாடியதால், இன்னும் சிறிது காலம் தொடர்ந்தேன்," என்று அஷ்வின் தனது மனதைத் திறந்தார். மேலும் பேசிய அவர்,"சென்னை டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளையும், ஒரு சதமும் அடித்தபோது, ஓய்வு முடிவு கடினமாக உணர்ந்தது."
"நீங்கள் சிறப்பாக ஆடும்போது, விடைபெறுவது மிகவும் கடினம்," என்று அவர் கூறினார். ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் தோல்வி மற்றும் ஆஸ்திரேலியாவில் பெர்த் டெஸ்டில் அணியில் இடம்பெறாதது அவரை மீண்டும் சிந்திக்க வைத்தது. "ஹோட்டல் அறையில், கூரையைப் பார்த்தபடி, 'நான் உண்மையில் என்ன செய்கிறேன்?' என்று கேள்வி எழுந்தது. குடும்பத்துடன் செலவிட முடியாத நேரம் என்னை மிகவும் பாதித்தது," என்று அவர் உருக்கமாகக் கூறினார்.
அஷ்வினின் இந்த உணர்ச்சிகரமான பயணம், ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டுகிறது. "மற்றவர்கள் உங்கள் உணர்ச்சிகளை புரிந்துகொள்வது கடினம். அவை உங்களுடையவை, வேறு யாருக்கும் அவை பொருட்டல்ல," என்று அவர் கூறியது, அவரது மனதில் நடந்த போராட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியாக, ஆஸ்திரேலிய தொடரில் தனது முடிவை உறுதி செய்தார்.
சச்சின் டெண்டுல்கருடன் ஒரு கனவு அனுபவம்:
அஷ்வினுக்கு, சச்சின் டெண்டுல்கருடன் ஒரே அணியில் விளையாடியது ஒரு 'ரசிகர் கனவு தருணம் தான். நான் ஒருபோதும் சச்சினுடன் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. அவரது ஷார்ஜா இன்னிங்ஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டங்கள் - நான் அவரது ரசிகனாக வளர்ந்தவன்," என்று அவர் நினைவு கூர்ந்தார். 2010இல், சச்சின் இரட்டை சதம் அடித்தபோது, அஷ்வின் டிரஸ்ஸிங் ரூமில் இருந்து அதைப் பார்த்தார். "அவர் இந்திய அணியில் நான் வரும் வரை தொடர்ந்து விளையாடியது, அவரது மாபெரும் திறமையை காட்டுகிறது," என்று அவர் பெருமையுடன் கூறினார்.
ராகுல் டிராவிட்: ஒரு உணர்ச்சிகரமான பந்தம்:
ராகுல் டிராவிட் குறித்து பேசும்போது, அஷ்வின் தனது மனதை முழுமையாகத் திறந்தார். "ராகுல் டிராவிட் மீது எனக்கு ஒரு 'மேன்-க்ரஷ்' இருந்தது. அவர் ஒரு அற்புதமான மனிதர்," என்று அவர் உற்சாகமாகக் கூறினார். முதலில், டிராவிட் ஒரு பாதுகாப்பு வீரராக, பந்துகளை விடாமல் விளையாடுபவராகத் தோன்றினார். சச்சின் மற்றும் சௌரவ் கங்குலியின் ஆக்ரோஷமான ஆட்டத்துடன் ஒப்பிடும்போது, டிராவிட் முதலில் கவர்ச்சிகரமாகத் தோன்றவில்லை.
ஆனால், அவரை நெருக்கமாக அறிந்தபோது, அவரது ஆளுமையும், பண்பும் அஷ்வினை கவர்ந்தன.
"டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது, நானும், ரோஹித்தும், மற்ற பயிற்சியாளர்களுடன் அவருடன் ஒரு அற்புதமான பந்தத்தை உருவாக்கினோம். அவருடனான உறவு என் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக இருக்கும்," என்று அவர் உருக்கமாகக் கூறினார். டிராவிடிடமிருந்து அஷ்வின் பலவற்றைக் கற்றுக்கொண்டார், மேலும் அவரது தலைமைத்துவம் மற்றும் அமைதியான அணுகுமுறை அவருக்கு பெரும் உத்வேகமாக இருந்தது.
மறக்க முடியாத MCG வெற்றி:
2022 டி20 உலகக் கோப்பையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தருணம். அஷ்வின், அந்தப் போட்டியில் தனது பங்களிப்பைப் பற்றி உற்சாகமாகப் பகிர்ந்தார். "நான் களமிறங்கியபோது, விராட் கோலி ஒரு தீவிரமான மனநிலையில் இருந்தார். நான் அவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டேன் - 'பந்து கிரிப்பிங் செய்கிறதா?' என்று. நான் ஒரு கவர் ஷாட் அல்லது லாஃப்ட் ஷாட் ஆடலாம் என்று நினைத்தேன்," என்று கூறினார்.
விராட், பந்து வேகமாக வருவதாகவும், எக்ஸ்ட்ரா கவர், மிட்-விக்கெட் அல்லது நேராக அடிக்கலாம் என்றும் அறிவுறுத்தினார்.
ஆனால், அஷ்வின் சிரித்தபடி, "நான் இந்த ஷாட்களை எல்லாம் சுலபமாக ஆட முடிந்தால், நான் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய மாட்டேன்," என்று பதில் அளித்தேன். ஒரு பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மைதானம் முழுவதும் மயான அமைதி நிலவியது. "ஒரு இந்திய ரசிகர்கூட நான் அந்த ரன்களை எடுப்பேன் என்று நம்பவில்லை," என்று அவர் நினைவு கூர்ந்தார்.முதல் பந்து ஒரு வைட் ஆனது. "அந்த வைட் பந்தை விட்டபோது, ரசிகர்கள் குழம்பினர். பின்னர், ஒரு நொடியில் மைதானம் கொண்டாட்டத்தில் மூழ்கியது," என்று அவர் கூறினார். அடுத்த பந்தில், அஷ்வின் ஒரு அழகான இன்சைட்-அவுட் ஷாட் ஆடி, ரன்களை உறுதி செய்தார். "நான் அதை சரியாக டைம் செய்தேன். அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தது," என்று அவர் புன்னகையுடன் கூறினார்.
ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு விளையாட்டு வீரராக மட்டுமல்ல, ஒரு உணர்ச்சிகரமான மனிதராகவும் தனது பயணத்தைப் பகிர்ந்துள்ளார். சச்சின், டிராவிட், மற்றும் விராட் போன்ற மாபெரும் வீரர்களுடன் பயணித்த அவரது அனுபவங்கள், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு உணர்ச்சிகரமான நினைவலைகளைத் தருகின்றன. சென்னையின் மண்ணில் இருந்து உலக அரங்கில் புகழ் பெற்ற அஷ்வின், தனது ஓய்வு முடிவுடன் ஒரு அத்தியாயத்தை முடித்தாலும், அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவில் நிற்கும்.