சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தோனி விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் அக்டோபர் 31ஆம் தேதி தெரியும். இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஐந்து ஆண்டுகள் விளையாடாத வீரர்களை uncapped கருதிக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்தது.

இதனால் தோனியை நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொள்ள சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், தோனியை நான் அன்காப்ட் வீரராக தக்க வைத்துக் கொள்ளாமல் சாதாரண வீரராகவே தேர்வு செய்ய வேண்டும் என்று அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின் பலரும் சிஎஸ்கே எந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
நான் ஒரு புதிய கோணத்தில் இந்த விஷயத்தை அணுகுகிறேன். நான் சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் இருந்தால் நிச்சயம் ருதுராஜ்,ஜடேஜா துபே, பதிராணா மற்றும் தோனியை நான் தக்கவைத்துக் கொள்வேன். குறிப்பாக தோனியை நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரராக தான் கருதுவேனே தவிர uncapped வீரராக கருத மாட்டேன். இந்த ஐந்து வீரர்களையும் தக்க வைத்துக் கொண்டு ஆறாவது வீரராக சமீர் ரிஸ்வியை ஆர் டி எம் கார்டு மூலம் ஏலத்தில் நான் மீண்டும் தேர்வு செய்வேன்.
பதிராணா பந்துவீச்சில் சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக இருக்கிறார். சிஎஸ்கே பேட்டிங் எப்போதும் போல சிறப்பாகவே இருக்கிறது. ருதுராஜ் தொடக்க வீரராக களமிறங்குவார். சிவம் துபே, நடு வரிசையிலும் ஜடேஜா பேட்ஸ்மேன் மற்றும் சுழற் பந்துவீச்சாளராகவும் இருப்பார். இதன் மூலம் உங்களுக்கு எட்டு ஓவர்கள் கிடைத்துவிடும். சமீர் ரிஸ்வியை தேர்வு செய்வதன் மூலம் சிஎஸ்கே வின் எதிர்காலம் நன்றாக இருக்கும். அவர் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற டி20 தொடரில் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.
நிதிஸ் ரெட்டி எவ்வளவு திறமையான வீரராக இருக்கிறாரோ அதேபோல் சமீர் ரிஸ்வியும் திறமை வாய்ந்தவராக இருக்கிறார். எனவே ஆறு வீரர்களை தேர்வு செய்து விட்டு ஏலத்திற்கு சென்று மூன்று பந்துவீச்சாளர்களையும் ஒரு பேட்ஸ்மேனையும் தேர்வு செய்ய வேண்டும் என அஸ்வின் கூறியுள்ளார்.