கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் ஆக களமிறங்கிய கொல்கத்தா அணி ஐந்தாவது தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது. 199 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் கொல்கத்தா அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே 199 ரன்கள் என்பது சேஸ் செய்யக்கூடிய இலக்கு தான் என்று நான் நினைத்தேன். நாங்கள் நல்ல முறையில் பந்து வீசி ஆட்டத்திற்குள் மீண்டும் வந்தோம்.

ஆனால் எங்கள் அணியில் பேட்டிங்கில் நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று நினைத்தேன்
ஆனால் அந்த இடத்தில் தான் நாங்கள் தொடர் முழுவதும் தடுமாறி வருகிறோம். தவறில் இருந்து விரைவாக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக தான் இருந்தது. ஆனால் 220 ரன்களுக்குள் குஜராத்தை சுருட்ட வேண்டும் என்று நினைத்தோம்.
அது படி நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இன்னும் நல்ல முறையில் பேட்டிங் செய்ய வேண்டும். குறிப்பாக நடு ஓவர்களில் தடுமாறி வருகிறோம். தொடக்கத்திலும் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். எங்கள் பௌலர்கள் குறித்து எந்த ஒரு புகாரும் இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பில்டிங்கிலும் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும்.
பில்டிங் மூலம் 15, 20 ரன்கள் நம்மால் தடுக்க முடியும். இது அனைத்தும் மன உத்வேகத்தை பொறுத்து இருக்கின்றது. எங்கள் வீரர்கள் அனைவரும் கடினமாக உழைத்து வருகிறார்கள். டி 20 கிரிக்கெட்டில் எப்போதுமே பயமின்றி விளையாடும் பேட்ஸ்மேன்களை பொறுத்ததாகும். கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது குறித்து யோசிக்கவே கூடாது.
தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு உங்களை வாய்ப்பை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். நல்ல மன உத்வேகத்துடன் விளையாடுங்கள். பேட்டிங் விளையாடும்போது அவுட் ஆகி விடுவோமோ என்று நினைத்துக் கொண்டே ஷாட்டை ஆடினால் நிச்சயம். நீங்கள் அவுட் தான் ஆவீர்கள். அதற்கு பதில் பௌண்டரி அடிக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டு பேட்டிங் செய்யுங்கள்.
நடு ஓவர்களில் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு தேவை கண்டிப்பாக நான் என் அணி பேட்டர்களுக்கு ஆதரவு அளிக்கின்றேன். ஆனால் அதே சமயம் கொஞ்சம் பயமின்றி இருங்கள். இன்று ஆங்கரிஸ் ரகுவன்சி நன்றாக விளையாடினார். இன்றைய சூழ்நிலை பொருத்தே மற்ற வீரர்களுக்கு முன்னுரிமை பேட்டிங் ஆர்டரில் வழங்கப்பட்டது என்று ரஹானே கூறியுள்ளார்.