Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெட்டை கதிரே.. ராஜஸ்தான் அணியை வழிநடத்தும் ராகுல் டிராவிட் - சங்கக்காரா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மும்பை: ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியின் இயக்குநராக சங்கக்காரா தொடர்வதாக கூறியுள்ள அந்த அணி நிர்வாகம், இருவரும் இணைந்து ராஜஸ்தான் அணியை வழிநடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

2008ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் முதல் தொடரை ராஜஸ்தான் அணி கைப்பற்றியது. அதன்பின் ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை ராஜஸ்தான் அணியால் கைப்பற்ற முடியவில்லை. 2022ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போதும், குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்தது. கடந்த சீசனிலும் குவாலிஃபையர் 2வது போட்டியில் தோல்வியடைந்தது.

ipl 2025 rahul dravid rajasthan royals

இதனால் இந்திய பயிற்சியாளரை கொண்டு வர ராஜஸ்தான் அணி நிர்வாகம் முயற்சிப்பதாக கூறப்பட்டது. அதற்கேற்ப டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த ராகுல் டிராவிட் உடனான பிசிசிஐ ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதனால் ராகுல் டிராவிட்டை ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்ய முயற்சித்தது.

ஏற்கனவே 2013 முதல் 2015 வரை ராஜஸ்தான் அணியுடன் ராகுல் டிராவிட் பணியாற்றியுள்ளார். இருந்தாலும் கடந்த சில மாதங்களாக ராகுல் டிராவிட் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் அவரது வீட்டிற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக பெங்களூரிலேயே ஒப்பந்தத்தை முடிவு செய்து, கையெழுத்தாகியுள்ளது.

இதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிஇஓ ஜேக் லஷ் மெக்ரம் அந்த அணியின் ஜெர்சியை ராகுல் டிராவிட்டுக்கு அளித்து வரவேற்றுள்ளார். இதுகுறித்து ராகுல் டிராவிட் பேசுகையில், டி20 உலகக்கோப்பை தொடரின் வெற்றிக்கு பின், அடுத்த சவாலை ஏற்பதற்கு இதுதான் சரியான தருணமாக நினைக்கிறேன். அந்த சவாலை எதிர்கொள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே சரியான இடம் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் சங்கக்காரா ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு ராஜஸ்தான் அணி மறைமுக விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மட்டுமே ராகுல் டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் சங்கக்காரா ராயல்ஸ் அணியின் இயக்குநராக தொடர்கிறார் என்று கூறியுள்ளது.

இதனால் ராஜஸ்தான் அணியை ராகுல் டிராவிட் மற்றும் சங்கக்காரா இருவரும் இணைந்து வழிநடத்தவுள்ளனர். அதேபோல் பார்படாஸ் ராயல்ஸ், பார்ல் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளை சங்கக்காரா வழிநடத்தவுள்ளார். ராஜஸ்தான் அணி நிர்வாகம் சங்கக்காராவுக்கு எந்த வகையில் மரியாதையை குறைக்கவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Friday, September 6, 2024, 18:49 [IST]
Other articles published on Sep 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+