IPL 2025: ஆர்சிபிக்கு எதிராகவும் 14 வயது வீரர் சூர்யவன்ஷி 2 சிக்சர்..புவனேஸ்வர் குமார் செய்த சம்பவம்
மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூரியவன்சி முதல் பந்திலேயே சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவினாலும் அனைவரின் கண்களும் வைபவ் சூர்யவன்ஷி மீது தான் இருந்தது. 20 பந்துகளை எதிர்கொண்ட அவர் 34 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று சிக்ஸர், இரண்டு பவுண்டரி என 120 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.

இந்த நிலையில் வைபவ் சூரியவன்சி இன்று ஆர் சி பி அணிக்கு எதிராக விளையாடினார். முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் வைபவ் சூர்யவன்சி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்தார்கள்.
சூரியவன்சி ஏதேனும் ஒரு போட்டியில் விளையாடும் வீரரா? இல்லை தொடர்ந்து இதே போல் தான் அதிரடி காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் இன்று சூர்யவன்சி மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்தார். 12 பந்துகளை எதிர்கொண்ட அவர் 16 ரன்கள் சேர்த்தாலும், அதில் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.
குறிப்பாக அனுபவ வீரரான புவனேஸ்வர் குமார் ஓவரில் அவர் அடித்த சிக்சர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. புவனேஸ்வர் குமார் ஓவரையே அடித்து விட்டாரே என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். எனினும் சூரிய வன்சியின் வயது தான் புவனேஸ்வர் குமாரின் அனுபவம் என்பதால் அவர் அபாரமாக ஸ்டெம்பை குறி வைத்து ஸ்விங் பந்தை வீசினார்.
இதனை கணிக்க தவறிய வைபவ் சூரியவன்சி பேட்டை சுற்றினால் ஆனால் வந்து பேட்டில் படாமல் ஸ்டெம்பை பதம் பார்த்தது. எனினும் சூரியவன்சி இளம் வீரர் என்பதால் புவனேஸ்வர் குமார் எந்த ஒரு கொண்டாட்டத்திலும் ஈடுபடாமல் அமைதியாக களத்தில் நின்றார். எனினும் மறுமுனையில் ஜெயஸ்வால் அதிரடி காட்டி 19 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று சிக்சர் ஏழு பவுண்டரிகள் அடங்கும்.


Click it and Unblock the Notifications