Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் ராஜஸ்தான்.. முதலிடம் பிடிக்க குஜராத் தீவிரம்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 47வது லீக் ஆட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள குஜராத் அணியும், ஒன்பதாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியும் பலப்பரிட்சை நடத்துகிறது.

எஞ்சி இருக்கும் ஐந்து போட்டிகளில் அனைத்து போட்டிகளுமே ராஜஸ்தானில் வெற்றி பெற வேண்டும். அதனால் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வியை தழுவினால், முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறிவிடும்.

GT vs RR

இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரியான் பராக், நாங்கள் முதலில் பந்து வீச முடிவு எடுத்து இருக்கின்றோம். லக்னோ அணிக்கு எதிராக நாங்கள் விளையாடிய அதே ஆடுகளம் போல் இது இருக்கின்றது. இந்த ஆடுகளத்தில் பந்தின் பவுன்ஸ் குறைவாக தான் இருக்கும் என நினைக்கின்றேன்.

முதலில் பந்து வீசும் போது பனிப்பொழிவு கொஞ்சம் குறைவாக இருக்கும். நாங்கள் இதுபோன்ற நெருக்கடியில் பலமுறை சிக்கியிருக்கும் இதிலிருந்து எப்படி வெளியே வருவது என்றும் எனக்கு தெரியும். நாங்கள் கடந்த மூன்று போட்டிகளில் மொத்தம் 35 ஓவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். அப்படி இருந்தும் நாங்கள் தோல்வியை தழுவி இருக்கின்றோம்.

அதுதான் ஐபிஎல் தொடரின் கொடுமை இன்று நாங்கள் இரண்டு மாற்றத்தை செய்திருக்கின்றோம். பதில் தீக்ஷனாவும் துஷார் தேஷ் பாண்டேக்கு பதில் இவ்விதம் அணியில் திரும்பி இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து பேசிய குஜராத் அணி கேப்டன் கில், நாங்கள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்கின்றோம்.

ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆடுகளத்தில் புற்களும் உள்ளது. நாங்கள் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமான ஆட்டமாக தான் எடுத்து இருக்கின்றோம். நாங்கள் கடந்த காலங்களில் என்ன செய்தோம் என்பது குறித்து யோசிப்பது கிடையாது. இந்த தொடரில் கொஞ்சம் கூட ரிலாக்ஸ் ஆக இல்லாமல் தொடர்ந்து ஆக்கோரசமாக காட்ட வேண்டும். எங்கள் அணியில் இன்று ஆப்கானிஸ்தான் வீரர் கரீம் ஜன்னத் அறிமுகமாகிறார் என்று கில் தெரிவித்துள்ளார்.இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவினால் தொடரைவிட்டு வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 28, 2025, 19:52 [IST]
Other articles published on Apr 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+