Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: 14 வயது வீரர் சூர்யவன்ஷியிடம் அடிவாங்கிய சிஎஸ்கே.. இனி சோகமான சாதனையை படைக்கப்போவது உறுதி

டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 62 ஆவது லீக் ஆட்டம் டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

பத்தாவது இடத்தை தவிர்ப்பதற்கான போட்டியாக இருந்த கருதப்படுவதால் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடியது. சிஎஸ்கே அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய கான்வே 10 ரன்களிலும், உர்வில் பட்டேல் டக் அவுட்டானார்கள்.

CSK vs RR

எனினும் சிஎஸ்கே வின் தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே, அஸ்வின் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் அஸ்வின் 8 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க, சிறப்பாக விளையாடிய ஆயுஸ் மாத்ரே 20 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இதில் எட்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். இதன் காரணமாக சிஎஸ்கே அணி பவர் பிளேவில் 68 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா ஐந்து பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 ரன் மட்டுமே சேர்த்தார். இந்த தருணத்தில் நடுவரிசையில் விளையாடிய டிவால்ட் பிரவீஸ் வழக்கம் போல் தன்னுடைய அதிரடியை காட்டினார். மூன்று சிக்ஸர், இரண்டு பவுண்டரி என பறக்க விட ராஜஸ்தான் அணி தடுமாறியது.

எனினும் பிரவீஸ் முக்கிய கட்டத்தில் 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து அவர் ஆட்டம் இழந்தார். சிஎஸ்கே அணி 13.4 ஓவர்கள் எல்லாம் 137 ரன்கள் எடுத்தது. ஆனால் 6 விக்கெட்டுகள் இழந்தது. இதனால் கடைசி ஐந்து ஓவர்களில் பெரிய சாட் ஆட முடியாமல் சிஎஸ்கே வீரர்கள் மெதுவாக விளையாடும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். சிவம்துபே, தோனி ஆகியோர் விக்கெட்டுகளை கொடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தற்காப்பு ஆட்டத்தில் விளையாடினர்.

32 பந்துகளை எதிர் கொண்ட சிவம் துபே 39 ரன்களில் ஆட்டம் இழக்க தோனி 17 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஆன்சூல் காம்போஜ் ஐந்து ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. கடைசி ஐந்து ஓவரில் சிஎஸ்கே வெறும் 41 ரன்களை மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ராஜஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஆகாஷ் மத்வால் மற்றும் யுத்வீர் சிங் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக விளையாடிய ஜெய்ஸ்வால் அதிரடி காட்டினார். வைபவ் அமைதி காக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அடித்த முதல் சில ரன்கள் அனைத்தும் ஜெய்ஸ்வால் பேட்டில் இருந்து தான் வந்தது. 19 பந்துகளில் ஜெய்ஸ்வால் ஐந்து பவுண்டரி, 2 சிக்சர் என 36 ரன்களை சேர்த்தார்.

ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்தவுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 14 வயது வீரரான வைபவ் சூரியவன்சியுடன் கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். சாம்சன் பொறுப்பாக விளையாட வைபவ் சூர்யவன்சி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர் என 33 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார்.

கேப்டன் சஞ்சு சாம்சன் 41 ரன்களில் வெளியேற, ரியான் பராக் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். இறுதியில் துருவ் ஜுரல் 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று சிக்சர், இரண்டு பவுண்டரி அடங்கும். சிம்ரன் ஹிட்மயர் 5 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை 17 புள்ளி ஓவரில் எல்லாம் எட்டியது.

சிஎஸ்கே பந்துவீச்சு தரப்பில் அஸ்வின் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்களையும் நூர் அகமத், அன்சூல் காம்போஜ் ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தனர். இந்த தோல்வியின் மூலம் சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக பத்தாவது இடத்துடன் நிறைவு செய்யப்போகிறது.

Story first published: Tuesday, May 20, 2025, 23:15 [IST]
Other articles published on May 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+