Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: நாங்க நிறைய தப்பு பண்ணிட்டோம்.. மும்பை சூப்பரா ஆடினாங்க.. ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. வாழ்வா சாவா என்ற கட்டத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணியில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் அந்த அணி வீரர்கள் எடுத்தனர். இதனை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 16.1 ஓவரில் 117 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Riyan Parag

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக், முதலில் மும்பை அணி விளையாடுவதற்கு அவர்களுக்கு நான் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். மும்பை வீரர்கள் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்று, அதன் பிறகு ஒரு ஓவருக்கு 10 ரன்கள் என்பது போல் அடித்தார்கள்.

பின் இறுதியில் ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள். எங்களுடைய பேட்டிங்கை பொறுத்த வரை இன்றைய நாள் எங்களுக்கான நாள் கிடையாது. 190 -200 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் எளிதாக சேஸ் செய்யக்கூடிய இலக்கு தான். ஆனால் ஹர்திக் பாண்டியா சூரியகுமார் ஆகியோர் இறுதி கட்டத்தில் பிரமாதமாக விளையாடினார்கள். நாங்கள் சில விஷயங்களை கொஞ்சம் மாற்றி செய்திருக்க வேண்டும்.

ஆனால் அப்படி நடக்கவில்லை. நாங்கள் தொடக்கத்தில் நன்றாக விளையாடினாலும், நடுவரிசையில் சொதப்பி விடுகின்றோம். நானும் துருவ்வும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் பவர் பிளேவில் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்து விட்டோம். நாங்கள் பல விஷயங்களில் தவறு செய்து விட்டோம்.

சில விஷயங்கள் தவறாக முடிவடைந்தது. எனவே தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அணியின் வளர்ச்சிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க முடிவு எடுத்து இருக்கின்றோம். நாங்கள் பல சிறிய தவறுகளை செய்யாமல் பார்த்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும். இந்த சீசனில் பல போட்டிகளில் அருகே வந்து தோல்வியை தழுவி இருக்கின்றோம். இனிவரும் அடுத்த மூன்று போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன் என்று ரியான் பராக் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, May 1, 2025, 23:46 [IST]
Other articles published on May 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+