For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025- மும்பையை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்தியது எப்படி? RCB கேப்டன் ரஜத் பட்டிதார் சொன்ன ரகசியம்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் ஆர் சி பி அணி கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணிலும், சிஎஸ்கேவை அதன் சொந்த மண்ணிலும் வீழ்த்தி தற்போது மும்பையையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருக்கிறது. ஒரே சீசனில் இந்த ரெக்கார்டை செய்த இரண்டாவது அணி என்ற பெருமையை ஆர் சி பி பெற்றிருக்கிறது.

222 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி அணி வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டது. இது குறித்து பேசி உள்ள ஆர் சி பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார், இது உண்மையிலே சிறப்பான போட்டியாகும். இது மிகவும் கடினமாக இருந்தது. எங்களுடைய பவுலர்கள் தங்களுடைய தைரியத்தை இன்று காட்டியிருக்கிறார்கள்.

Rajat Patidar

அதை பார்க்கும் போதே அபாரமாக இருந்தது. எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையிலேயே எங்கள் அணியின் பவுலர்களுக்கு தான் இந்த விருதை கொடுக்க வேண்டும். மும்பையில் எந்த அணியையும் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது தடுக்கவே முடியாது. அதுவும் இந்த ஆடுகளத்தில் எங்கள் அணி அதை செய்திருப்பது நிச்சயம் பாராட்டத்தக்கது.

எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் நல்ல முறையில் தங்களுடைய திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். குர்னல் பாண்டியா கடைசி ஓவர் வீசிய விகிதம் பிரமாதமாக இருந்தது. அதை சுலபமாக செய்ய முடியாது. ஆனால் அவர் தன்னுடைய தைரியத்தை காட்டி இருக்கிறார். நாங்கள் இந்த போட்டியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம்.

இதன் மூலம் கடைசி ஓவரில் குர்னல் பாண்டியாவை பயன்படுத்தலாம் என்று நாங்கள் நினைத்தோம். இந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக பேட்டிற்கு வந்தது. பவுன்சும் நன்றாக இருந்தது. குர்னல் வீசிய ஒரு ஓவர் எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அதிரடியாக ஆடி விக்கெட் விழுவது குறித்து கவலைப்பட கூடாது என்று நான் விளையாடினேன்.

லெக் ஸ்பின்னர் டி20 போட்டியில் மிகவும் முக்கியமான பவுலராக மாறி இருக்கிறார்கள். அவர்கள் தான் விக்கெட்டுகளை எடுக்குகிறார்கள். இன்று அவர் நன்றாக பந்து வீசினார். நாங்கள் இந்த போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினோம். மும்பை அணியின் பவுலர்கள் மீது நெருக்கடியை ஏற்படுத்த விரும்பினோம். அது இன்று நடந்தது என்று ரஜத் பட்டிதார் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, April 8, 2025, 7:00 [IST]
Other articles published on Apr 8, 2025
English summary
IPL 2025- Rajat Patidar is the MVP of the RCB vs MI Match and He reveals the reason for win
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+