Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மாதிரி ஏலம்.. அர்ஜுன் டெண்டுல்கரை வாங்கிய மும்பை.. கிண்டல் செய்த அணிகள்.. டென்ஷனான அஸ்வின்!

சென்னை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் 4 நாட்களில் ஜெட்டா நகரில் நடக்கவுள்ளது. இதனையொட்டி இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் மாதிரி ஏலத்தை நடத்தி வருகிறார். இதற்காக பிரத்யேக சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு, 10 அணிகளின் நிர்வாகிகள் போல் ஏலம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய நாளில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் வெளிநாட்டு வீரர்கள், உள்ளூர் வீரர்கள் உட்பட பலரும் ஏலத்தில் விடப்பட்டனர். அதில் கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய குல்தீப் சிங் ரூ.90 லட்சத்திற்கு மும்பை அணியாலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் ரூ.1.25 கோடிக்கு பஞ்சாப் அணியாலும், அதர்வா தைடே ரூ.70 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியாலும் வாங்கப்பட்டனர்.

ipl 2025 ravichandran ashwin arjun tendulkar


பின்னர் ஆஃப்கான் வீரர் ஃபரூக்கி ரூ.3.5 கோடிக்கு ஐதராபாத் அணியாலும், ஆர்சிபி அணியின் அனுஜ் ராவத் ரூ.80 லட்சத்திற்கு மீண்டும் ஆர்டிஎம் மூலம் வாங்கப்பட்டார். தொடர்ந்து ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் ரூ.50 லட்சத்திற்கு ஆர்சிபி அணியாலும், ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சன் ரூ.50 லட்சத்திற்கு பஞ்சாப் அணியாலும், இந்திய அணியின் ஆகாஷ் தீப் ரூ.70 லட்சத்திற்கு கேகேஆர் அணியாலும் வாங்கப்பட்டனர்.

தொடர்ந்து ஆஃப்கான் வீரர் அல்லா கசன்ஃபர் ரூ.3.50 கோடிக்கு குஜராத் அணியாலும், இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் ரூ.1 கோடிக்கு குஜராத் அணியாலும், ராஜஸ்தான் முன்னாள் வீரர் சேத்தன் சக்காரியா ரூ.1.75 கோடிக்கு லக்னோ அணியாலும், தென்னாப்பிரிக்கா வீரர் பர்கர் ரூ.1 கோடிக்கு டெல்லி அணியாலும், ஷெர்ஃபன் ரூதர்ஃபோர்ட் ரூ.90 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியாலும் வாங்கப்பட்டனர்.

இதன்பின் சிஎஸ்கே முன்னாள் வீரர் முகேஷ் சவுத்ரியை ரூ.50 லட்சத்திற்கு மும்பை அணியும், கேகேஆர் அணிக்காக ஆடிய வைபவ் அரோரா ரூ.4 கோடிக்கு மீண்டும் அந்த அணியாலேயே வாங்கப்பட்டார். தொடர்ந்து ஆர்சிபி முன்னாள் வீரர் சுயாஷ் பிரபிதேசாய் ரூ.50 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியாலும், ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசாவை ரூ.70 லட்சத்திற்கு குஜராத் அணியாலும் வாங்கப்பட்டனர்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் அன்சுல் கம்போஜ் ரூ.3.75 கோடிக்கு குஜராத் அணியாலும், டெல்லி முன்னாள் வீரர் லலித் யாதவை ரூ.50 லட்சத்திற்கு ஆர்சிபி அணியும், தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த்தை ரூ.1.25 கோடிக்கு ராஜஸ்தான் அணியாலும், நவ்தீப் சைனி ரூ.50 லட்சத்திற்கு பஞ்சாப் அணியாலும், சிஎஸ்கே முன்னாள் வீரர் சமீர் ரிஸ்வி ரூ.3.50 கோடிக்கும், மணிஷ் பாண்டே ரூ.70 லட்சத்திற்கும் லக்னோ அணியால் வாங்கப்பட்டனர். ஓரூர்க் ரூ.50 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியாலும், ராப் மின்ஸ் ரூ.80 லட்சத்திற்கு கேகேஆர் அணியாலும் வாங்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் மார்க் வுட் ரூ.1.25 கோடிக்கு கேகேஆர் அணியாலும், மனோஜ் பாண்டகே ரூ.50 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணியாலும், டெல்லி முன்னாள் வீரர் குமார் குசாக்ரா ரூ.60 லட்சத்திற்கு மும்பை அணியாலும், ஆர்சிபி முன்னாள் வீரர் ஸ்வப்னில் சிங் ரூ.2 கோடிக்கு மும்பை அணியாலும், மயங்க் டாகர் ரூ.30 லட்சத்திற்கு ஆர்சிபி அணியாலும், அர்ஜூன் டெண்டுல்கர் ரூ.30 லட்சத்திற்கு மும்பை அணியாலும் வாங்கப்பட்டார். அப்போது அரங்கமே கைதட்ட, டென்ஷனான அஸ்வின் அனைவரையும் பார்த்து முடிச்சிட்டீங்களா என்று கோபமாக பார்த்தார்.

பின்னர் சுபம் துபே ரூ.30 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணியாலும், இலங்கை வீரர் மதுஷங்கா ரூ.50 லட்சத்திற்கு கேகேஆர் அணியாலும், தென்னாப்பிரிக்காவின் பிரெவிஸ் ரூ.70 லட்சத்திற்கு டெல்லி அணியாலும், ரியான் ரிக்கல்டன் ரூ.50 லட்சத்திற்கு மும்பை அணியாலும், டிஎன்பிஎல் தொடரில் அசத்திய குர்ஜப்னீத் சிங் ரூ.30 லட்சத்திற்கு லக்னோ அணியாலும், யாஷ் துல் ரூ.30 லட்சத்திற்கு ஐதராபாத் அணியாலும், அன்மோர்ப்ரீத் சிங் ரூ.30 லட்சத்திற்கு டெல்லி அணியாலும், சன்விர் சிங், சந்தீப் வாரியர் தலா ரூ.30 லட்சத்திற்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டனர்.

Story first published: Wednesday, November 20, 2024, 21:20 [IST]
Other articles published on Nov 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+