Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: நான் இன்னும் சரியாக விளையாடி இருக்கலாம்.. எதிர்காலம் திட்டம் இது தான்.. ஜடேஜா கருத்து

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியதற்கு பல முக்கிய காரணங்கள் இருந்தாலும், அதில் ஜடேஜா பெரிய அளவு பந்துவீச்சில் சாதிக்கவில்லை என்பது மட்டும்தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

18 கோடி ரூபாய் கொடுத்து ஜடேஜாவை சிஎஸ்கே அணி தக்க வைத்தது. இதில் 14 இன்னிங்சில் ஜடேஜா 301 பேட்டிங்களும்,பந்துவீச்சில் 10 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தார். ஆனால் அவருடைய பந்துவீச்சு சராசரி 32 என்று அளவில் இருந்தது.

Jadeja

எக்னாமி 8.5 என்ற அளவில் இருக்கிறது. இதேபோன்று 2022 ஆம் ஆண்டு சீசனில் ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்தபோது அந்த அணி மிகவும் மோசமாக செயல்பட்டது.8 போட்டிகளுக்கு பிறகு ஜடேஜா தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து விலகினார். தன்னுடைய கேப்டன் அனுபவம் குறித்து பேசிய ஜடேஜா, அது கடினமாக தான் இருந்தது.

டி20 கிரிக்கெட் என்பது ஒவ்வொரு பந்துமே மிகவும் முக்கியமானது. ஆட்டம் மிகவும் வேகமாக செல்லும்.
நான் கேப்டனாக இருந்த போது அது நல்ல அனுபவத்தை கொடுத்தது. நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். ஒரு கேப்டனாக நீங்கள் இருக்கும் போது, உங்கள் அணி நன்றாக விளையாடாமல் போனால் அனைத்து பழிகளும் கேப்டன் மீது விழுந்திரும்.

பந்துவீச்சில் மாற்றம் பில்டிங்கில் மாற்றம் என அனைத்து குறித்தும் ஒரு கேப்டன் யோசிக்க வேண்டும்.ஆனால் எங்கள் அணி துரதிர்ஷ்டவசமாக அப்போது சரியாக செயல்படவில்லை. இதுவே அனைவரும் நன்றாக வெற்றிக்கு பங்களித்து நாங்கள் வெற்றி பெற்றிருந்தோம் என்றால் அனைத்தும் சரியாக நடந்திருக்கும்.

இது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் கிடையாது தற்போது நான் அணியின் சீனியர் வீரராக இருக்கின்றேன். தோனி கேப்டனாக இருந்த போது அணியில் உள்ள 10 வீரர்களை பற்றியும் யோசிப்பார். அவர்களை எப்படி சிறப்பாக செயல்பட வைப்பது என்று யோசிப்பார்.தற்போது நான் சீனியர் ஆக டெஸ்ட் அணியில் இருப்பதால் மற்ற வீரர்களுக்கு உதவ முயற்சி செய்வேன் என்று ஜடேஜா கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 29, 2025, 17:31 [IST]
Other articles published on May 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+