Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025:மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி என 3 அணிகளுக்கு இங்கிலாந்து ஆப்பு..தொடரில் பங்கேற்பதில் சந்தேகம்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இன்னும் ஏழு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு போட்டி வரும் நிலையில் ஐபிஎல் தொடர் தற்போது 10 நாட்கள் இடைவெளிக்கு பின் நடைபெறுவதால் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

ஐபிஎல் தொடர் முதலில் வெளியிடப்பட்ட அட்டவணையில் மே 25ஆம் தேதி உடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரின் பங்கேற்க இங்கிலாந்து வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது.

IPL 2025 England cricket players 2025

தற்போது ஐபிஎல் போட்டிகள் ஜூன் மூன்றாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி மே 29ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஜாஸ் பட்லர், ஜேக்கப் போத்தேல், வில் ஜேக்ஸ் உள்ளிட்ட மூன்று ஐபிஎல் வீரர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள். இதனால் இந்த மூன்று வீரர்களும் இங்கிலாந்து தொடருக்கு திரும்புவார்களா இல்லை ஐபிஎல் தொடரிலே தொடர்ந்து விளையாடுவார்களா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

குஜராத் அணிக்கு பட்லரும், ஆர் சி பி அணிக்கு ஜாகப் போத்தெலும், மும்பை அணிக்கு வில் ஜாக்ஸும் முக்கியமான வீரராக இருக்கிறார்கள். இந்த மூன்று வீரர்களும் இல்லை என்றால் அது மிகப்பெரிய பின்னடைவை இந்த மூன்று அணிகளுக்கும் ஏற்படுத்தும். இது குறித்து விளக்கம் அளித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரின் அட்டவணையை பார்த்து தான் நாங்கள் எங்கள் அணியின் வீரர்களுக்கு தடையில்லா சான்றுகளை வழங்கினோம்.

தற்போது ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றும், இங்கிலாந்து அணியின் தொடரும் ஒரே நேரத்தில் நடக்கின்றது. இதனால் அடுத்தது என்ன செய்வது என்பது குறித்து பிசிஐயுடன் நாங்கள் கலந்து பேசி முடிவெடுப்போம். நாங்கள் ஐபிஎல் தொடருக்கு முழு ஆதரவை வழங்கி தான் அட்டவணையை தயார் செய்தோம். தற்போது எதிர்பாராத விதமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.

இதேபோன்று ராஜஸ்தான் அணிக்கு விளையாடும் ஜோப்ரா ஆர்ச்சர் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் ஜெமி ஓவர்டன் ஆகியோருக்கும் இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்திருக்கிறார்கள். இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் ஆர்சிபி அணிக்காக அதிரடியாக விளையாடிய ரோமாரியோ ஷெபர்ட் மற்றும் குஜராத் அணிக்காக விளையாடிய ரூதர்போர்டு, லக்னோ அணிக்காக இடம்பெற்றுள்ள சமர் ஜோசப் ஆகியோரும் இங்கு இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சேர்ந்திருக்கிறார்கள். இதனால் இந்தத் தொடர் ஐபிஎல் போட்டிக்கு மிகப்பெரிய பாதிப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 13, 2025, 20:12 [IST]
Other articles published on May 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+