Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி மீது வெளிப்படையாக குறை சொன்ன ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்..தோல்விக்கான காரணம் குறித்து பேச்சு

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி தங்களது சொந்த மண்ணில் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் ஆர் சி பி அணியை மற்ற ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆர் சி பி அணியின் கேப்டனாக ரஜத் பட்டினத்தாரை விராட் கோலி தான் தேர்வு செய்தார்.

இந்த சூழலில் தோல்விக்கான காரணம் குறித்து விராட் கோலியை குறை கூறி ரஜத் பட்டிதார் பேசி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் ஆர்சிபி அணி 42 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Rajat Patidar

இதில் ரஜத் பட்டிதார் 12 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனால் அவர் பவர்பிளேவில் முடிந்து இரண்டாவது பந்தில் பெவிலியன் திரும்பினார். இந்த சூழலில் தன் மீது இருக்கும் தவறை மறைத்துவிட்டு தனக்கு பதவி வழங்கிய விராட் கோலியையே விமர்சிக்கும் அளவுக்கு ரஜத் பட்டிதார் பேசி இருப்பது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து பேசிய அவர், இன்றைய ஆட்டத்தில் நாங்கள் 200 ரன்கள் மேல் அடிக்கவேண்டும் என்று குறிக்கோள் எல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் 190 ரன்களை தாண்ட வேண்டும் என்று நினைத்தோம். இந்த போட்டியில் நாங்கள் இழந்த ஒவ்வொரு விக்கெட்டும் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. எங்கள் அணியில் விக்கெட்டுகள் இழந்த பிறகும் சில வீரர்கள் அதிரடி காட்டியது மிகவும் நல்ல விஷயம். ஆனால் பவர் பிளேவில் நாங்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

குஜராத் அணி பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது. எனினும் அந்தக் கட்டத்திலும் எங்களுடைய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். எங்களுடைய பவுலர்கள் கடும் உழைப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அது சுலபமான காரியம் கிடையாது. இது போன்ற ஆடுகளத்தில் நாங்கள் நிர்ணயித்த இலக்கை 18-வது ஒவர் வரை கொண்டு சென்றதே மிகப்பெரிய விஷயமாக நான் நினைக்கின்றேன்.

எங்கள் பௌலர்களின் செயல்பாட்டை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கின்றது. மூன்று விக்கெட்டுகளை நாங்கள் இழந்த பிறகு ஜித்தேஷ் மற்றும் லிவிங் ஸ்டோன், டீம் டேவிட் ஆகியோர் அபாரமாக விளையாடினர். மூன்று விக்கெட்டுகளை இழந்தும் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் பாசிட்டிவாக விளையாடியது நல்ல விஷயமாக பார்க்கின்றேன். எங்கள் அணியின் பேட்டிங் குறித்து எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. விக்கெட்டுகள் விழுந்தும் வீரர்கள் அதிரடி காட்டியதை இந்தப் போட்டியில் பாசிட்டிவ் விஷயமாக நான் பார்க்கின்றேன் என்று ரஜத் பட்டிதார் கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 3, 2025, 7:01 [IST]
Other articles published on Apr 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+