For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025- கோலிக்கு கேப்டனாக இருப்பது பெருமை..நாங்கள் செய்த ஒரு மூவ் ஆட்டத்தை மாற்றியது.. ரஜத் பேச்சு

கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணியில் புதிய கேப்டனாக களமிறங்கிய ரஜத் பட்டிதார் வெற்றியுடன் தொடரை தொடங்கி இருக்கிறார். கே கே ஆர் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி விளையாடுகிறது என்று சொன்னாலே ரசிகர்கள் அந்த அணி 49 ரன்களில் ஆல் அவுட்டானதை வைத்து தான் கிண்டல் செய்வார்கள்.

இந்த சூழலில் இன்றைய ஆட்டமும் அவ்வாறுதான் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய கேப்டன் ரஜத் பட்டிதார் இன்று விராட் கோலி தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றினார். வெற்றிக்குப் பிறகு பேசிய அவர் ஆர்சிபி அணிக்கு கேப்டனாக தலைமை தாங்குவது நிச்சயம் எனக்கு ஒரு விதம் அழுத்தம் தான்.

Rajat Patidar

ஆனால் இன்று எனக்கு சிறந்த நாளாக அமைந்தது. இதே போல் பல சிறந்த நாள் அமையும் என நான் நம்புகிறேன். ரஜத் விக்கெட்டை நாங்கள் விரைவில் எடுக்க வேண்டும் என நினைத்தோம். இதனால் தான் சுயாஷ் சர்மாவுக்கு நான்காவது ஓவருக்கு பந்து வீச அழைத்தேன். அவர் எவ்வளவு ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.

எங்களின் முக்கிய ஸ்ட்ரைக் பவுலர் அவர்தான். இதனால் அவருக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குவோம். இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு முழு காரணம் குர்னல் பாண்டியா ஆகும். கே கே ஆர் அணி பலமான நிலையில் இருந்த போது எங்கள் அணி பவுலர்கள் கொஞ்சம் கூட அச்சமே இல்லாமல் தைரியமாக பந்து வீசி விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என முயற்சி செய்தார்கள்.

விராட் கோலி போன்ற ஜாம்பவானுக்கு கேப்டனாக இருப்பது பெருமையாக இருந்தது. எனக்கு அவர் முழு ஆதரவை வழங்கினார். விராட் கோலி போன்ற ஒரு ஜாம்பவானிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.எங்கள் அணி பவுலர்கள் விக்கெட் எடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் தொடர்ந்து பந்து வீசி விளையாடினார்கள்.

ஹர்ஷித்ராணாவுக்கு எதிராக நான் அடித்த ஷார்ட் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு நான் அடித்தது தான். நான் கவர் திசை நோக்கி அடிக்க முற்பட்டேன். ஆனால் பந்து பேட்டில் எட்ஜ் ஆகி தன்னாலே அவ்வாறு சென்று விட்டது என்று ரஜத் பட்டிதார் கூறியுள்ளார்.

Story first published: Sunday, March 23, 2025, 0:32 [IST]
Other articles published on Mar 23, 2025
English summary
IPL 2025- RCB Captain Rajat Patidar Lauds suyash sharma and krunal Pandya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+