Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025-ஆர்சிபிக்கு சாதகமாக விழுந்த டாஸ்..ஜெர்சியை மாற்றிய RCB..ராஜஸ்தான் அணியில் முக்கியம் மாற்றம்

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 28 வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி, ராஜஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார், நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கின்றோம். ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்று எங்களுக்கு தெரியும்.

RCB

இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பச்சை நிற ஜெர்சியை அணிந்திருக்கிறோம். அதிக அளவு மரங்கள் நட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மாற்றத்தை செய்திருக்கிறோம். எங்கள் அணியில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், நாங்களும் முதலில் பந்து வீச தான் இருந்தோம்.

ஆட்டம் போகப் போக பேட்டிங்கிற்கு சாதகமாகும் என்பதுதான் உள்ளூர் வாசிகளின் தகவலாக இருக்கின்றது. இந்த ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும். எதிரணியை மதித்து எங்களுடைய முழு திறனை வெளிப்படுத்தினால், நிச்சயம் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

ஐபிஎல் தொடரில் எப்போதுமே ஏற்றும் இறக்கங்கள் இருக்கும். இதன் காரணமாக நமக்குள் ஏற்படும் சந்தேகங்களை நாம் அனுமதிக்க கூடாது. எங்கள் அணியில் இன்று ஹசரங்கா திரும்பி இருக்கிறார். பரூக்கிற்கு பதிலாக அவர் விளையாடுவார் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார் .

ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்தில் முதலில் பந்து வீசுவதால் படிக்கல் களமிறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புள்ளி பட்டியலை பொருத்தவரை ஆர்சிபி அணி தற்போது ஐந்தாவது இடத்திலும், ராஜஸ்தான் அணி ஏழாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி ஒரு அரை சதம் அடித்தால் ஐபிஎல் தொடரில் அதிக அரை சதம் அடித்த ரெக்கார்டை அவர் சமன் செய்வார்.

Story first published: Sunday, April 13, 2025, 15:28 [IST]
Other articles published on Apr 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+