Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஆர்சிபிக்கு சின்னசாமி மைதானத்தில் சூனியம் வச்சிட்டாங்க.. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி தங்களது சொந்த மைதானமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. ஆர்சிபி அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த நான்கு வெற்றிகளுமே வெளியூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் கிடைத்தவை. இந்த மூன்று தோல்விகளுமே சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டிகள் ஆகும். இதன் மூலம் நடப்பு சீசனில் சொந்த மண்ணில் ஒரு வெற்றி கூட பெறாத அணி என்ற சோகமான சாதனையை ஆர்சிபி படைத்திருக்கிறது.

RCB vs PBKS

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் ஆர்சிபி அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியின் முன்வரிசை வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி திரும்பினர். மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது தார்பாயால் மைதானம் மூடப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் பேட்டிங் செய்ய ஆர்சிபி வீரர்கள் தடுமாறினர். பில் சால்ட் நான்கு ரன்களிலும், விராட் கோலி ஒரு ரன்னிலும், லிவிங்ஸ்டோன் நான்கு ரன்களிலும், ஜிதேஷ் சர்மா இரண்டு ரன்களிலும், குர்ணல் பாண்டியா 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் ரஜத் பட்டிதார் 18 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து பெபிலியன் திரும்பினார். இதனால் ஆர்சிபி அணி 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் rcb தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரான 49 ரன்களை மீண்டும் எடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் ஐம்பது ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் rcb அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது. பிரியான்ஸ் ஆர்யா 16 ரன்களிலும், பிராப்சிம்ரன்சிங் 13 ரன்களிலும் ஆட்டம் இழக்க, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஏழு ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இதேபோன்று ஜாஸ் இங்கிலீஷ் 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் பஞ்சாப் அணி 53 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் ஆர் சி பி அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நெஹல் வதேரா தனியாளாக நின்று ஆசிபியின் கதையை முடித்தார். மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர் என 19 பந்துகளில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுக்க பஞ்சாப் அணி 12 புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் பஞ்சாப் அணி ஐந்தாவது வெற்றியைப் பெற்று தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. டெல்லி அணியும் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, April 19, 2025, 0:33 [IST]
Other articles published on Apr 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+