Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லை மீறிய ஆர்சிபி ரசிகர்கள்.. ஜெயில் சீருடை அணிந்து சிஎஸ்கே உடன் ஒப்பீடு.. பெங்களூரில் பரபரப்பு

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபி அணிகள் மோதும் ஆட்டம் தற்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதில் 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் ஆர் சி பி அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இந்த சூழலில் ஆர்சிபியின் சொந்த மைதானத்தில் தற்போது சிஎஸ்கே விளையாடுகிறது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இரு அணிகளுக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தமாக இருக்கின்றது. காரணம் ஆர்சிபி ஐ விட சிஎஸ்கே அணி பல வெற்றிகளை குவித்து இருக்கிறது.

RCB Fands troll CSK

ஐந்து முறை கோப்பையை வென்றிருக்கிறது. அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. ஆனால் ஆர்சிபி அணி வெறும் வாய் பேச்சில் மட்டும்தான் வல்லவர்கள் என்பதால் சிஎஸ்கே அணி மீது எப்போதும் அவர்களுக்கு பொறாமை இருக்கும். இந்த நிலையில் ஒருமுறை கூட கோப்பை வாங்காமல் ஆர்சிபி ரசிகர்கள் ஏதோ பத்து கோப்பையை வென்றது போல் வாய் பேசி வருவார்கள்.

சிஎஸ்கே அணி ஏதேனும் போட்டியில் தோற்றால் அதனை ஆர்சிபி கொண்டாடுவார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி மட்டுமல்லாமல் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து பெங்களூரில் ஆர்சிபி ரசிகர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சிஎஸ்கே ரசிகர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் இரு அணிகளும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த சூழலில் மைதானம் முன்பு போடப்பட்டிருந்த கடைகளில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் விதமாக கைது சீருடை சிஎஸ்கே என பதிவிட்டு 2016-17 என்ற வாசகம் இடம் பெற்றிருக்கிறது.

அதாவது சிஎஸ்கே அணி 2 ஆண்டு தடை விதிக்கப்பட்ட விஷயத்தை கிண்டல் செய்யும் விதமாக ஆர்சிபி ரசிகர்கள் இதனை பதிவிட்டுள்ளனர். இது சிஎஸ்கே ரசிகர்களை ஆத்திரம் அடைய வைத்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்சிபி கோட்டையான சின்னசாமி மைதானத்தில் லாலிபாப் உடன் சென்று வெறுப்பேற்றினார்கள். அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆர்சிபி ரசிகர்கள் இதை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

Story first published: Saturday, May 3, 2025, 19:56 [IST]
Other articles published on May 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+