Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வீரர்களை செருப்பால் அடித்த ஆர்சிபி ரசிகர்கள்.. கடும் ஆத்திரத்தில் சென்னை அணி பேன்ஸ்

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி சிறப்பாக செயல்பட்டு 16 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதன் மூலம் இன்னும் எஞ்சி இருக்கும் மூன்று போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட ஆர்சிபி அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விடும்.

இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கும், சிஎஸ்கே அணிக்கும் எப்போதுமே களத்தில் கடும் போட்டி நிலவும். இதில் பெரும்பாலான போட்டிகளில் சிஎஸ்கே அணி தான் வெற்றி பெறும். இதனால் சிஎஸ்கே அணி மீது ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரிய அளவில் வன்மம் இருந்து வருகிறது.

RCB Fans

இதனால் சிஎஸ்கே அணியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆர் சி பி ரசிகர்கள் கிண்டல் செய்து விடுவார்கள். அண்மையில் நடைபெற்ற சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கூட ஆர் சி பி அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டி நடைபெறுவதற்கு முன்பு சிஎஸ்கே அணியை கிண்டல் செய்யும் விதமாக ஜெயில் கைதி உடையை அணிந்து கொண்டு ஆர் சி பி ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தார்கள்.

இந்த சூழலில் தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சி எஸ் கே, ஆர் சி பி போட்டியை பெரிய திரையில் பார்க்கும் ரசிகர்கள் போட்டி முடிவடைந்த உடன் செருப்பை எடுத்து சிஎஸ்கே வீரர்கள் தோன்றும்போதெல்லாம் அவர்களை செருப்பாலயே அடித்தார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஆர் சி பி ரசிகர்களின் இந்த எல்லை மீறிய செயல் சிஎஸ்கே ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஆர்சிபி அணிக்கு தற்போது தான் ஒரு நல்லது நடந்து கொண்டிருக்கிறது என்றும் ஆனால் அந்த அணியின் ரசிகர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருப்பதால் அவர்கள் தேவையில்லாத எதிர்ப்பை தான் சம்பாதிக்கிறார்கள் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து முறையை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியே அமைதியாக இருக்கும்போது ஆர்சிபி ரசிகர்கள் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் துள்ளி குதிப்பதாக குற்றச்சாட்டியுள்ளனர். மேலும் கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்க்காமல் ஆர் சி பி ரசிகர்கள் தரம் தாழ்ந்து நடந்து கொள்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.

Story first published: Tuesday, May 6, 2025, 22:04 [IST]
Other articles published on May 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+