Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB memes: ஆல் ஏரியாலையும் நாங்க கில்லி டா! இப்போ வாங்க டா சண்டைக்கு..கொண்டாட்டத்தில் ஆர்சிபி பேன்ஸ்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி அபாரமாக விளையாடி மூன்று வெற்றிகளை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. குறிப்பாக மும்பை அணிக்கு எதிரான வான்கடே மைதானத்தில் 222 ரன்கள் என்ற இலக்கை ஆர் சி பி அணி வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டது.

இதன் மூலம் கொல்கத்தாவில் கேகேஆர் அணியையும் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியையும் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் வீழ்த்தி ஆர் சி பி சாதனை படைத்திருக்கிறது.

RCB Memes

இதனால் ஆர் சி பி அணியின் வெற்றியை ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். ஆர் சி பி அணி சுமாராக விளையாடினாலே அவர்கள் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. இதில் அபாரமாக விளையாடிவிட்டதால் சமூக வலைத்தளத்தில் ஆர்சிபி கொடி பறக்கிறது. இதனால் போற வர ரசிகர்களை எல்லாம் ஆர் சி பி ரசிகர்கள் வம்பு இழுத்து வருகிறார்கள்.

இதை மீம்ஸ் போடும் விதமாக வடிவேலுவுக்கு ஆர் சி பி ஜெர்சி போட்டு சண்டைக்கு வாங்கடா சண்டைக்கு வாங்கடா என்று வம்பு இழுப்பது போல் பதிவிட்டு இருக்கிறார்கள். இதேபோன்று கில்லி படத்தில் விஜய் பேசுவது போல் இந்த ஏரியா அந்த ஏரியா இல்ல எல்லா ஏரியாலையும் ஐயா கில்லி டா என்று ஆர் சி பி அணி சேப்பாக்கம், கொல்கத்தா மற்றும் மும்பை வான்கடே மைதானத்தில் வென்றதை குறிப்பிட்டு ரசிகர்கள் மீம்ஸ் போட்டுள்ளனர்.

IPL memes

அதேபோன்று நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி படுதோல்வி அடைந்து இருக்க வேண்டிய நிலையில் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். ஹர்திக் தனி ஆளாக போராடிய நிலையில் அவர் ரசிகர்களை பார்த்து மேட்ச் ஒன்சைடாக போனதா என்று கேட்பது போல் மீம்ஸ் போட்டுள்ளனர்.

IPL Memes

இன்னொரு மீம்சில் மும்பை அணி தோற்றத்தை சிஎஸ்கே ரசிகர்கள் கிண்டல் செய்வதுபோலாகவும், அதற்கு மும்பை ரசிகர்கள் நாங்க ஃபைட் பண்ணிதான தோத்தோம் உன்ன மாதிரி தொக்கு வச்சா தோற்றோம் என்று கேட்பது போல் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்துள்ளனர். இதேபோன்று சிஎஸ்கே ரசிகர்கள் கான்வே வந்தா நீங்க காலி என்று சொல்வது போலவும், மும்பை ரசிகர்கள் பும்ரா வந்தால் நீங்க காலி என்று சொல்வது போலவும் பேசி வந்தனர். ஆனால் இருவரும் வந்தும் இரண்டு அணிகளும் தோற்றுவிட்டது.

Story first published: Tuesday, April 8, 2025, 13:55 [IST]
Other articles published on Apr 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+