Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025:விராட் கோலியும், நானும் நண்பர்கள் கிடையாது.. ஆர்சிபி வீரரின் பேட்டியால் ரசிகர்கள் ஆத்திரம்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி அபாரமாக விளையாடி வருவதற்கு அந்த அணியின் தொடக்க வீரர்களும் ஒரு காரணம் நடப்பு சீசனில் விராட் கோலி ஆங்கர் ரோல் செய்யும் நிலையில், சால்ட் அதிரடி காட்டி வருகிறார்.

இதனால் ஆர்சிபி அணி நல்ல தொடக்கத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் rcb அணி நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் பில் சால்ட் பங்கு பெற்றார். அதில் பில் சால்டிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளர், நீங்கள் ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் நட்புக்கு இடம் கிடையாது என்று கூறினீர்களே.

Virat kohli Phil Salt

தற்போது நீங்களும் விராட் கோலியும் நண்பர்கள் கிடையாதா என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த பின் சால்ட், ஆம் நண்பர்கள் கிடையாது, உடன் பணிபுரிபவர் என்று பதில் அளித்தார். உடனே ஐயோ தவறாக பதில் சொல்லிவிட்டோம் என்பதை புரிந்து கொண்டு மீண்டும் பதில் அளித்த பில் சால்ட், நான் யாருடன் எல்லாம் கிரிக்கெட் விளையாடுகிறேனோ அவர்களெல்லாம் என்னுடைய நண்பர்கள் தான்.

எனவே நீங்கள் கேட்கும் கேள்விக்கு சர்ச்சையாக பதில் சொல்லி நான் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்று கூறினார். இதன் அடுத்து அப்போ நீங்கள் விராட் கோலியுடன் நண்பர் கிடையாதா என்று மீண்டும் அவர் கேட்க அதற்கு கொலிக்ஸ் என்று பில் சால்ட் பதிலளித்தார். பில் சால்டின் இந்த பதிலை தான் தற்போது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கோலி போன்ற ஜாம்பவான் வீரருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தும், அதை கொண்டாடாமல் இங்கிலாந்து வீரர் திமிருடன் நடந்து கொண்டு இருப்பதாக ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர். தற்போது புள்ளி பட்டியலில் ஆர்சிபி அணி 10 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றி மூன்று தோல்வி 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த சூழலில் ஆர்சிபி அணிக்கு சிஎஸ்கே, லக்னோ மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இருக்கின்றது. இதில் ஆர்சிபி அணி குறைந்தது ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 30, 2025, 12:08 [IST]
Other articles published on Apr 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+