Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 - விராட் கோலி உள்பட 2 பேரை மட்டுமே தேர்வு செய்ய போகும் ஆர்சிபி.. சிஎஸ்கேக்கு அடித்த லக்

பெங்களூர் : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் 24 , 25ஆம் தேதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ஒவ்வொரு அணிகளும் எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் என்பதை இம்மாதம் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அறிவிக்கப்பட வேண்டும்.

இந்த சூழலில் ஒவ்வொரு அணிகளும் ஆறு வீரர்களை அதிகபட்சமாக தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த ஆறு வீரர்கள் இந்திய வீரர்களாகவும் இருக்கலாம். வெளிநாட்டு வீரர்களாகவும் இருக்கலாம். ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறார்களோ அதை பொறுத்து rtm கார்டு வசதி வழங்கப்படும்.

ipl 2025 rcb virat kohli 2025

அந்த வகையில் சில அணி நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொண்டு இரண்டு ஆர்டிஎம் கார்டு மூலம் ஏலத்தில் பங்கு பெற முடிவெடுத்து இருக்கிறது. இந்த சூழலில் முதலாவது வீரருக்கு 18 கோடி ரூபாயும், இரண்டாவது வீரருக்கு 14 கோடி ரூபாயும், மூன்றாவது வீரருக்கு 11 கோடி ரூபாயும், நான்காவது வீரருக்கு 18 கோடி ரூபாயும், ஐந்தாவது வீரருக்கு 14 கோடி ரூபாயும் தக்க வைக்கப்படும்போது வழங்க வேண்டும் என பி சி சி ஐ அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் ஆர்சிபி அணி மெகா ஏலத்திற்கு முன்பு வெறும் இரண்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டால் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. ஆர்சிபி அணியில் டுப்ளசிஸ் தலைமையில் களமிறங்கியது. எனினும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு வந்தாலும் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை. அதேபோன்று ஆர்சிபி அணியின் கேப்டன் டுபிளசிஸ்க்கும் வயது நாற்பதை தாண்டுவிட்டது.

தினேஷ் கார்த்திக், தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் எந்த வீரரை தக்க வைத்துக் கொள்வது என்ற குழப்பத்தில் ஆர்சிபி இருக்கிறது. இதன் காரணமாக விராட் கோலியை மட்டும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவில் ஆர்சிபி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் அடுத்து விராட் கோலிக்கு 18 கோடியிலிருந்து 20 கோடி ரூபாய் வழங்க rcb முடிவு எடுத்திருக்கிறது. இதனை அடுத்து இரண்டாவது வீரராக டுபிளசிஸ் அல்லது மேக்ஸ்வெல்லை தக்க வைக்க ஆர்சிபி முடிவு எடுத்திருக்கிறது.

வயதை காரணம் காட்டி டுபிளசிசை ஆர்சிபி அணி விடுவிக்கலாம். இதனால் மாக்ஸ்வெல் ஆர்சிபி அணியில் மீண்டும் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை டுப்ளசிசை ஆர்சிபி அணி விடுவித்து விட்டால் சிஎஸ்கே அவரை தட்டி தூக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் டுபிளசிஸ் சிஎஸ்கே அணிக்காக தென்னாப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி அணியில் இருக்கும் மற்றொரு நட்சத்திர வீரரான கேமரா க்ரீனுக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது அவர் வெறும் பேட்ஸ்மேன் ஆக தான் ஆஸ்திரேலிய அணியில் விளையாடுகிறார் என்பதால் அவரை தக்க வைக்க ஆர்சிபி அணி விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Story first published: Monday, October 21, 2024, 19:32 [IST]
Other articles published on Oct 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+