Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: பிரீத்தி ஜிந்தாவை கட்டிப்பிடிக்க ஓடி வந்த ஆர்சிபி வீரர்.. தடுத்து நிறுத்திய பஞ்சாப் வீரர்

மும்பை: ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் மட்டுமல்லாமல் அணி உரிமையாளர்களுமே பிரபலமாகி இருப்பார்கள். ஆனால் ஒரு பிரபலமே அணி உரிமையாளராக இருந்தால், அது எப்படி இருக்கும். இப்படி தான் கே கே ஆர் அணியை ஷாருக்கானும், பஞ்சாப் அணியை ப்ரீத்தி சிந்தாவும் வாங்கி இருந்தார்கள்.

பாலிவுட் நட்சத்திரங்களாக இருந்தாலும் இவர்கள் கொஞ்சம் கூட தாங்கள் பெரிய ஸ்டார் என்று காட்டிக் கொள்ளாமல் இளம் வீரர்களிடம் அன்பாக ஆதரவாக பேசுவார்கள். குறிப்பாக ப்ரீத்தி ஜிந்தா தம் ஒரு நடிகை என்று பாராமல் எப்போதுமே இளம் வீரர்களுக்கு துணையாக இருப்பார்.

Priety Zinta hugs jitesh s

இளம் வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்து அவர்களை சோகத்திலிருந்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.மேலும் பல இளம் வீரர்களை ஊக்கமளிக்கும் விதமாக குறித்து பிரீத்தி ஜிந்தா நடத்துவார். இதனால் தான் பஞ்சாப் அணியை விட்டு வீரர்கள் சென்றாலும்,பிரீத்தி ஜிந்தா மீது தனி மரியாதையுடன் பல வீரர்கள் இருந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் ஆர்சிபி அணியில் தற்போது விளையாடி வரும் ஜித்தேஷ் சர்மா ஏற்கனவே பஞ்சாப் அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் சந்திகாரில் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது. அப்போது பிரீத்தி ஜிந்தா மைதானத்தில் நின்று கொண்டிருந்தார்.ப்ரீத்தி ஜிந்தாவை பார்த்தவுடன் ஜித்தேஷ் ர்மா ஓடிவந்து அவரை கட்டி அணைக்க வந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பஞ்சாப் வீரர் ஜித்தேஷ் சர்மாவை தடுத்து நீ ஏன் இங்கு வருகிறாய் என்பது போல் கேள்வி கேட்டார். எனினும் அவரை விளையாட்டுக்காக தள்ளிவிட்டு ஜித்தேஷ் சர்மா ப்ரீத்தி ஜிந்தா வை கட்டி அணைத்தார். ப்ரீத்தி ஜிந்தாவும் ஜித்தேர்மாவுக்கு கட்டுப்பிடி வைத்தியம் கொடுத்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

பலரும் இதனை நகைச்சுவையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் ஜித்தேஷ் சர்மாவை முதல்முறையாக அடையாளம் காட்டியதே பஞ்சாப் அணி என்பதால்,அந்த அணி மீது ஜித்தேஷ் சர்மா பாசமாக இருப்பதால்தான் இவ்வாறு வந்து அவர் கட்டிப்பிடித்து மரியாதையை வெளிப்படுத்தியதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இதற்கு ரசிகர் ஒருவர் பஞ்சாப் அணியில் ஆண் உரிமையாளர்களும் பலர் இருக்கிறார்கள் அவரை ஏன் ஜிதேஷ் சர்மா கட்டிப் பிடிக்கவில்லை என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

Story first published: Tuesday, April 22, 2025, 20:26 [IST]
Other articles published on Apr 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+