For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: சிக்சர் லைனில் அபார கேட்ச்.. துள்ளி குதித்து கொண்டாடிய கோலி..ரோமரியோ தவறை சரி செய்த சால்ட்

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியும் பஞ்சாப் அணியும் பலப் பரீட்சை நடத்தி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய ஆர் சி பி அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார்.

இதன் மூலம் 20 முடிவில் ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற ஆசையில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.இந்த நிலையில் 191 ரன்கள் தான் வெற்றி என்று இலக்கில் பஞ்சாப் அணி களம் இறங்கியது.

RCB vs PBKS

பஞ்சாப் அணியின் பலமே அந்த அணியின் தொடக்க வீரர்கள் தான். பிரியான்ஸ் ஆர்யாவும், பிராப் சிம்ரன் சிங்கும் அபாரமாக விளையாடி ரன்களை சேர்ப்பார்கள். இந்த சூழலில் ஆட்டத்தில் மூன்றாவது ஓவரில் பிராப்சிம்ரன் அடித்த பந்தை சிக்சர் லைனில் கைக்கு வந்த கேட்சை ஆர்சிபி வீரர் ரோமெரியோ செபர்ட் தவறவிட்டார்.

இது ஆர்சிபிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.கேட்சை விட்டதால் rcb வீரர்கள் நொந்து போய் களத்தில் நின்றனர். இந்த நிலையில் இதனை சரி செய்யும் விதமாக ஆட்டத்தில் ஐந்தாவது ஓவரில் ஒரு அபாரமான சம்பவம் நடைபெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் அதிரடி வீரரான பிரியான்ஸ் ஆர்யா 24 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், பந்தை சிக்ஸருக்கு அடிக்க முற்பட்டார்.

அப்போது சிக்ஸர் லைனில் நின்று கொண்டிருந்த பில் சால்ட் பந்தை பிடித்து விட்டார். எனினும் 6 லைனில் தாண்டி சென்று விடுவோம் என்பதை உணர்ந்த அவர் பந்தை தூக்கி போட்டுவிட்டு பின்னர் சிக்ஸர் லைனில் மிதித்து மீண்டும் களத்திற்குள் வந்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். இது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக மாறியது.

பவர் பிளேவில் பிரியான்ஸ் ஆர்யா விக்கெட்டை வீழ்த்தியதால் ஆர்சிபி வீரர்கள் துள்ளி குதித்துக் கொண்டாடினர். முக்கியமாக விராட் கோலி இந்த கேட்சை எதிர்பார்க்காத நிலையில் பில் சால்டை ஓடி கட்டி பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஹேசல்வுட் இதுவரை விளையாடிய எந்த ஒரு இறுதிப் போட்டியிலும் தோற்றதில்லை என்ற நிலையில் தற்போது முதல் விக்கெட்டை அவர் வீழ்த்தி இருக்கிறார்.

Story first published: Tuesday, June 3, 2025, 22:31 [IST]
Other articles published on Jun 3, 2025
English summary
IPL 2025- RCB Player Phil salt Fantastic catch Puts PBKS In back foot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+