Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: 14 பந்தில் RCB வீரர் அரைசதம்.. ஒரே ஓவரில் 33 ரன்கள் விளாசல்.. சிஎஸ்கேக்கு இமாலய இலக்கு

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணி எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் ரொமேரியோ சேபர்ட் ஒரே ஓவரில் 33 ரன்கள் விளாசி அசத்தி இருக்கிறார். இதன் மூலம் நடப்பு சீசனில் ஒரே ஓவரில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள் என்பது இதுவாகும். இதன் மூலம் ஆர் சி பி அணி கடைசி இரண்டு ஓவர்களில் 57 ரன்கள் அடித்து போட்டியை சிஎஸ்கே அணி இடம் இருந்து கவர்ந்து சென்றது.

டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடுத்து களமிறங்கிய rcb அணியின் தொடக்க வீரர் ஜாக்கப் போத்தேல் மற்றும் விராட் கோலி ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

Romario Shephard

அதிரடி காட்டிய ஜோக்கப் பொத்தல் 33 பந்துகளில் 55 ரன்கள் எடுக்க விராட் கோலி 33 பந்துகளின் 62 ரன்கள் சேர்த்தார் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது. இந்த சூழலில் ஆர்சிபி அணி 11.5 ஓவர்கள் எல்லாம் 121 ரன்கள் எடுத்த நிலையில் நடுவரிசை வீரர்களான டேவுதட் படிக்கல் மற்றும் ரஜத் பட்டிதார், ஜிதேஷ் சர்மா ஆகியோர் தடுமாறினர்.

இதனால் ஆர் சி பி அணி 200 ரன்களை தாண்டாது என எதிர்பார்க்கப்பட்டது. 180 ரன்களை தொடவே ஆர் சி பி அணி கஷ்டப்பட்டது. ஆனால் அது அனைத்தும் ஒரே ஓவரில் மாறியது. கலீல் அகமத் ஆட்டத்தின் 19 ஆவது ஓவரரை வீசினார். ஆர்சிபி வீரர் சேபர்ச், 6, 4 அடித்து தள்ளினார். இந்த ஓவரில் நான்கு சிக்ஸர்களும், இரண்டு பவுண்டரிகளும் சென்றது.

இதன் மூலம் ஒரே ஓவரில் செபர்ட் 33 ரன்கள் குவித்தார்.இதில் ஆட்டம் தலைக்கீழ் மாறியது. இதேபோன்று பதிராணா கடைசி ஓவர் வீசினார். இதில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களை ஆர்சிபி வீரர்கள் அடித்தனர். இந்த ஓவரிலும் 24 ரன்கள் சென்றது. இதன் மூலம் கடைசி இரண்டு ஓவரில் 57 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணி ஆட்டத்தையே தலைகீழ் மாற்றியது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரெமோரியோ செபர்ட் 14 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியிருக்கிறார். இதனால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு சிஎஸ்கே அணி ஒருமுறை கூட 180 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக சேஸ் செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 3, 2025, 21:40 [IST]
Other articles published on May 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+