Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: 2 ஸ்ப்பின்னர்களை வைத்து பஞ்சாப் கதையை முடித்த RCB.. மீண்டும் மேஜிக் நிகழ்த்துவாரா ஸ்ரேயாஸ்

சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த பஞ்சாப் அணியும் ஐந்தாவது இடத்திலிருந்து ஆர்சிபி அணியும் இன்று பலப்பரிட்சை நடத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆர் சி பி அணியை, பஞ்சாப் அணி சின்னசாமி மைதானத்தில் வீழ்த்தியது.

தற்போது ஒருநாள் இடைவெளியில் மீண்டும் இரு அணிகளும் சந்திக்காரில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர் சி பி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் அதிரடியாக ஆட வேண்டும் என முற்பட்டு விக்கெட்டுகளை இழந்தனர்.

PBKS vs RCB

தொடக்க வீரராக விளையாடிய பிரியான்ஸ் ஆரியா 22 ரன்களும், பிராப்சிம்ரன் சிங் 17 பந்துகளில் 33 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதேபோன்று ஜோஸ் இங்கிலீஷ் 29 ரன்களும், நெஹல் வதேரா ஐந்து ரன்களும் ஆட்டம் இழந்தனர்.

அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாசாங் 33 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதே போன்று மார்க்கஸ் ஸ்டோனிஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. கடைசி ஐந்து ஓவரில் பஞ்சாப் அணி வெறும் 38 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ஆர்சிபி பந்துவீச்சு தரப்பில் சுழற் பந்துவீச்சாளர்கள் குர்னல் பாண்டியா நான்கு ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் சுயாஸ் ஷர்மா 4 ஓவர் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஆர் சி பி அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு பஞ்சாப் அணியை 160 ரன்கள் சுருட்டு இருக்கிறார்கள். இதைப் போன்று கடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு அபாரமாக விளையாட இன்றைய ஆட்டத்தில் ரன் அவுட் ஆனதும் போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Story first published: Sunday, April 20, 2025, 17:28 [IST]
Other articles published on Apr 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+