For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

RCB அணிக்கு இவ்வளவு ரசிகர்களா? 10 நாளிலேயே எனக்கு ஜாலியாக இருக்கு.. ஆட்டநாயகன் விருது வென்ற குர்னல்

கொல்கத்தா : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தி இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி தொடக்கத்தில் அபாரமாக விளையாடியது.

10 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது ஆர் சி பி அணியின் குர்னல் பாண்டியா அபாரமாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Krunal Pandya

இந்த நிலையில் குர்னல் பாண்டியாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளத்துக்கு மத்தியில் நாங்கள் விளையாடும் போது எங்களுடைய கவனத்தை நாங்கள் சுருக்கி கொண்டு பந்துவீச்சில் மட்டும்தான். முழு கவனத்தையும் வைத்திருக்க வேண்டும்.

என்னுடைய பந்தில் அடிக்க வேண்டும் என்றால் என்னுடைய நல்ல பந்துகளில் தான் அவர்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும். இன்றைய போட்டியில் அணியின் வெற்றிக்காக உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்டம் செல்லும் திசை நோக்கி நாமும் செல்ல வேண்டும். கிரிக்கெட் என்பது உருமாறி வருகிறது.

தொடர்ந்து சிக்சர்களை அடிக்கும் வகையில் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய திறமையை வளர்த்து வருகிறார்கள். எனவே பவுலர்களும் அதற்கு ஏற்றார் போல் தங்களுடைய திறனை மாற்றிக் கொள்ள வேண்டும். இதனால் தான் நான் பந்துகளின் வேகத்தை அதிகப்படுத்தினேன். பொதுவாக வேகப்பந்துவீச்சாளர்கள் தான் பந்தின் வேகத்தை மாற்றி மாற்றி வீசுவார்கள்.

ஆனால் நானும் அதை இன்று முயற்சி செய்து பார்த்தேன். ஒரு பந்தை வீசக்கூடிய திறமை உங்களிடம் இருக்கிறது என்றால் அது ஏன் நாம் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆர் சி பி அணிக்காக விளையாடுவது அபாரமாக இருக்கின்றது. நான் ஆர் சி பி அணிக்குள் வந்த உடனே அந்த அணிக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

ரசிகர்கள் பெரும் அளவு எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நான் பெங்களூருவில் சாதாரண உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட வந்தாலே அங்கு இருக்கும் ரசிகர்கள் ஆர் சி பி ஆர் சி பி என்று கத்துவார்கள். நான் இந்த அணிக்கு வந்து பத்து நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் எனக்கு மிகவும் பிடித்து விட்டது என்று குர்னல் பாண்டியா கூறினார்.

Story first published: Sunday, March 23, 2025, 0:57 [IST]
Other articles published on Mar 23, 2025
English summary
IPL 2025- RCB Star Krunal Pandya shares his winning mantra
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+