அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இறுதி போட்டிக்கு ஆர்சிபி அணி முதல் அணியாக தகுதி பெற்றிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறையாக ஆர்சிபி தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது.
முதல் குவாலிபையர் போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணி எதிர்கொண்டு 102 ரன்கள் என்று இலக்கை வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பத்தாவது ஓவரில் ஆர்சிபி எட்டியது.இந்த சூழலில் rcb அணி இன்று மீண்டும் பஞ்சாப்பை இறுதி போட்டியில் எதிர்கொள்கிறது.

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர் பில் சால்ட் மிகவும் முக்கிய காரணமாக இருந்தார். விராட் கோலி உடன் அதிரடியாக விளையாடி ஆர்சி பி அணிக்கு நல்ல தொடக்கத்தை பில் சால்ட் கொடுத்து வந்தார்.12 போட்டிகளில் விளையாடியுள்ள பில் சால்ட் மொத்தமாக 387 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் அவருடைய சராசரி 35 என்று அளவிலும் ஸ்ட்ரைக் ரேட் 175 என்ற அளவில் உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான குவாலிஃபயர் முதல் போட்டியில் 27 பந்துகளில் 56 ரன்கள் அவர் விளாசி இருந்தார். இந்த நிலையில் பில் சால்ட் மனைவிக்கு பிரசவம் என்பதால் அவர் இறுதி போட்டியில் பங்கேற்காமல் நாடு திரும்பினார்.
நேற்று நடைபெற்ற பயிற்சியிலும் பில் சால்ட் இல்லை. இறுதிப் போட்டியில் ஒரு முக்கிய வீரர் இல்லை என்பதால் அது ஆர் சி பி அணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். இந்த சூழலில் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் அதிகாலை 3 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் பில் சால்ட் வந்து இறங்கி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தற்போது பில் சால்ட் ஓய்வில் இருப்பதாகவும், இறுதிப்போட்டியில் கண்டிப்பாக அவர் விளையாடுவார் என்றும் ஆர் சி பி வட்டாரம் தெரிவிக்கின்றது. குவாலிஃபயர் முதல் சுற்று போட்டியின் போது நாடு திரும்பிய சால்ட் மீண்டும் ஆர்சிபி அணிக்காக இறுதிப்போட்டியில் விளையாடுவார் என்ற செய்தி அந்த அணி ரசிகர்களுக்கு நிம்மதி பெருமூச்சியை தந்திருக்கிறது. இதனிடையே ஆர்சிபி அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டிம் டேவிட் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு பதில் லியான் லிவிங்ஸ்டோன் களமிறங்கி இருந்தார். தற்போது இறுதிப் போட்டியில் டிம் டேவிட் பங்கேற்பாரா என்று தெரியவில்லை.