லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணியை கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி தற்போது குவாலிஃபயர் முதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் குவாலிபயர் ஒன்றில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவினாலும், மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
லக்னோவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர் மேத்தீவ் 14 ரன்களில் வெளியேறினார். இதை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மிச்சல் மார்ஸ், ரிஷப் பண்ட் கூட்டணி அதிரடியாக விளையாடி rcb-யின் பந்துவீச்சை சுளுக்கு எடுத்தது.

மிட்செல் மார்ஸ் 37 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இந்த சீசன் முழுவதும் கடுமையாக சொதப்பிய ரிஷப் பண்ட், இன்றைய ஆட்டத்தில் தனது பழைய அதிரடியை காட்டி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தினார். 29 பந்துகளில் அரைசதம் விளாசிய ரிஷப் பந்த் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 54 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.
இறுதியில் நிக்கோலஸ் பூரான் 13 ரன்கள் எடுக்க, ரிஷப் பந்த் 61 பந்துகளின் 118 முதல் சேர்த்தார். இதில் 11 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் லக்னோ அலி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்தனர்.
குறிப்பாக இருவரும் பவர்பிளேவில் பவுலர்களை அடித்து அசத்தினர். பில் சால்ட் 19 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பௌண்டரிகள் அடங்கும். இதன் மூலம் பவர்பிளேவில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்தது. இந்த ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேவில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 60 ரன்களை எட்டிய அணி என்ற தனித்துவமான சாதனையை ஆர் சி பி பெற்றது.
ஒரு புறம் ஆர்சிபி அணி தடுமாறியது. கேப்டன் ரஜத் பட்டிதார் 14 ரன்களிலும் லிவிங்ஸ்டோன் டக் அவுட் ஆகி வெளியேற விராட் கோலி மட்டும் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும். விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரைட் 180 என்ற அளவில் இருந்தது. விராட் கோலி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 54 ரன்களில் வெளியேறினார்.
இந்த சூழலில் நடுவரிசையில் விளையாடிய மாயங் அகர்வால் மற்றும் நித்திஷ் சர்மா இருவரும் கூலாக விளையாடி லக்னோ அணியின் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ஜித்தேஷ் சர்மா 33 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்தார். இதில் 6 சிக்சர், 8 பவுண்டரி அடங்கும். இதன் மூலம் ஆர்சிபி அணி 18.4 வது ஓவரில் வெற்றியை பெற்றது.