Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- "ஹர்திக்கிற்காக ஃபில் பண்றேன்".. தம்பிக்காக பாசத்தை பொழிந்த அண்ணன் குர்னல் பாண்டியா

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணிக்காக அண்ணன் குர்னல் பாண்டியாவும் மும்பை அணிக்காக தம்பி ஹர்திக் பாண்டியாவும் விளையாடினார்கள். இது மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது.அப்போது குர்ன்ல் பாண்டியா அபாரமாக பந்துவீசி கடைசி ஓவரில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் ஆர் சி பி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா நடு ஓவரின் அபாரமாக விளையாடினார். இதனால் மும்பை அணி மூன்று ஓவரில் 58 ரன்கள் அடித்தது. எனினும் குர்னல் பாண்டியாவால் மும்பை அணி தோற்றது.

Krunal Pandya

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குர்னல் பாண்டியா, எங்கள் இருவருக்கும் மிகப்பெரிய பந்தம் இருக்கின்றது. நாங்கள் இருவரும் மோதும் போது இறுதியில் ஒருவர்தான் வெற்றி பெற முடியும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் எங்களுக்குள் இருக்கும் அன்பும் பாசமும் எப்போதுமே இருக்கும்.

அது இயல்பானது. ஹர்திக் உண்மையிலே இன்று அபாரமாக பேட்டிங் செய்தார். அதேசமயம் நாங்கள் வெற்றி பெற்றும் ஹர்திக் பாண்டியாவும் வெற்றி பெற வேண்டும் என நினைத்திருப்பார். நானும் அதுதான் நினைத்தேன். கண்டிப்பாக ஹர்திக் பாண்டியா அதுக்காக நான் பீல் பண்ணுகின்றேன். நான் பந்து வீச வந்தபோது ஷாட்னர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது லெஃப்ட் சைடு பவுண்டரி தூரம் கொஞ்சம் குறைவாக இருந்தது. நான் ஐபிஎல் தொடரில் 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடுகின்றேன். இதனால் எனக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து நான் சரியான முறையில் பந்து வீசினேன். நாம் 100% போட்டியில் முழு பங்களிப்போடு செயல்பட வேண்டும். அப்படி இருக்கும் போது நாம் தீட்டிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது சுலபமாக மாறிவிடும்.

நான் ஒவ்வொரு பந்தையும் வீசும் போது நான் எப்படிப்பட்ட பந்தை வீசப் போகிறேன் என்று முன்பே முடிவு செய்து விடுவேன். ஆண்டி ஃப்ளவருடன் பணியாற்றுவது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏனென்றால் லக்னோ அணியில் இருக்கும் போது நானும் அவரும் நன்றாக இணைந்து பணியாற்றினோம். நான் மூன்று போட்டிகளில் கேப்டன் ஆகவும் செயல்பட்டேன். நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இதன் மூலம் மனதளவில் நல்ல உத்வேகத்துடன் இருக்கின்றோம்.

ரஜத் பட்டி தார் அபாரமாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் கேப்டனாக இருக்கும் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் ஈசியான சூழலை ஏற்படுத்துகிறார். நம்மிடம் பந்தை கொடுத்து நாம் போடும் திட்டத்திற்கு துணையாக நிற்கின்றார். களத்தில் எதையும் அவர் கடினமாக மாற்றிக் கொள்வது கிடையாது. இதேபோன்று ஜித்தேஷ் சர்மா ஆட்டம் அபாரமாக இருக்கிறது அவருடைய போட்டியின் போது விழிப்புணர்வு அபாரமாக இருக்கின்றது.

அவர் அபாரமாக பயிற்சி செய்து வருகிறார். அதற்கான முடிவுகள் ஆட்டத்திற்கு தெரிகிறது. நான் இப்போதே நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் இன்னும் பல போட்டிகள் இருக்கின்றது. நாங்கள் எங்கள் தலையை தாழ்த்திக் கொண்டு வெற்றி பெற முயற்சி செய்வோம் என்று குர்னல் பாண்டியா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, April 8, 2025, 7:20 [IST]
Other articles published on Apr 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+