Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs RCB: அஸ்வின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொண்ட தோனி.. 'தல'யை போட்டு பொளக்கும் ரசிகர்கள்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி மேற்கொண்ட யுத்திகள் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆறாவது முறையாக கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இம்முறை சிஎஸ்கே அணி பிளே ஆப் சென்றாலே மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என்று நினைக்கும் அளவுக்கு சிஎஸ்கே வின் ஆட்டம் அமைந்தது.

MS Dhoni

ஆர் சி பி அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ருதுராஜ், சிவம் துபே, தீபக் ஹூடா, ராகுல் திருப்பாதி, ஷாம்கரன் ஆகியோர் சொற்ப ரன்களின் ஆட்டம் இழந்து உள்ளனர். இதனால் சிஎஸ்கே அணியின் தோல்வி உறுதி என ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது. எனினும் சிஎஸ்கே அணி தோல்வியின் வித்தியாசத்தை நிச்சயம் குறைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

தோனி களத்தில் இருந்ததால் கடைசி வரை சிஎஸ்கே அணி போராடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 12.5 வது ஓவரில் சிஎஸ்கே அணிக்கு இம்பேக்ட் வீரராக களமிறங்கிய சிவம் துபே 19 ரன்களில் ஆட்டம் இழந்தார். அப்போது சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 43 பந்துகளில் 117 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. சிவம் துபே ஆட்டம் இழந்தவுடன் ரசிகர்கள் பலரும் தோனி களத்திற்கு வந்து தனி ஆளாக போராடுவார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் தோனிக்கு பதில் அஸ்வின் தான் களத்திற்கு வந்தார். இது ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களையும் ஏமாற்றம் அடைய செய்தது. சுழற் பந்துவீச்சாளரான அஸ்வின் பெரிய ஷாட் ஆட முற்பட்டார். ஆனால் அவரால் வெறும் சிங்கிள்ஸ் மட்டும்தான் அடிக்க முடிந்தது. அஸ்வின் 8 பந்துகளை எதிர் கொண்டு 11 ரன்கள் சேர்த்தார்.

இதில் ஒரு பவுண்டரி மட்டும் அடங்கும்.அஸ்வின் 15 புள்ளி இரண்டாவது ஓவரில் ஆட்டம் இழந்தார். இதனால் தோனி களத்திற்கு 9வது வீரராக தான் வந்தார். எனினும் தோனியும் முதலில் தடுமாறினார். ஆறு பந்துக்கு வெறும் மூன்று ரன்கள் மட்டுமே அடித்தார். கடைசியில் வெற்றியே பெற முடியாத என்ற கட்டத்திற்கு வந்த நிலையில் சிஎஸ்கே வின் வெற்றிக்கு 12 பந்துகளுக்கு 76 ரன்கள் தேவைப்பட்டது.

அதன் பிறகு தோனி மூன்று பவுண்டரி, இரண்டு சிக்ச்ர்களை விளாசினார். இதற்கு தான் ரசிகர்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். தோனி நல்ல பார்மில் இருக்கும்போது அவர் ஏன் அஸ்வின் முதுகு பின்னாடி ஒளிந்து கொண்டு தாமதமாக களத்திற்கு வர வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

தோனி முன்பே களத்திற்கு வந்து ரன்களை அடித்திருக்க வேண்டும் என்றும் தனி ஆளாக போராடி சிஎஸ்கே வின் தோல்வி வித்தியாசத்தை குறைத்து இருக்க வேண்டும் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.சி எஸ் கே வின் இந்த யுக்தி மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவர்கள் குறை கூறியுள்ளனர்.

Story first published: Saturday, March 29, 2025, 7:30 [IST]
Other articles published on Mar 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+