Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs GT: டாஸ் வென்ற சுப்மன் கில்.. ஆர்சிபி, குஜராத் பிளேயிங் 11இல் யார், யார்?

பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் 14வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்றது. அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்றவுடன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ககிசோ ரபாடா அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக அர்ஷத் கான் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

IPL 2025 RCB vs GT Toss and Playing XI update - Gujarat Titans won the toss

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசல்வுட், யாஷ் தயாள்.

குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்): சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ராகுல் திவேதியா, அர்ஷத் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.

குஜராத் டைட்டன்ஸ் இம்பேக்ட் வீரர்கள்: ஷெர்ஃபேன் ரூதர்போர்ட், கிளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரோர், வாஷிங்டன் சுந்தர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இம்பேக்ட் வீரர்கள்: சுயாஷ் ஷர்மா, ராசிக் சலாம், மனோஜ் பண்டகே, ஜேக்கப் பெத்தேல், ஸ்வப்னில் சிங்.

டாஸ் வென்றது குறித்து சுப்மன் கில் பேசுகையில், "நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். இது நல்ல விக்கெட்டாக உள்ளது. இங்கு சூழ்நிலை அதிகம் மாறாது என நினைக்கிறேன். நாங்கள் வேண்டுமென்று தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும். சில பகுதிகளில் எங்களை நாங்களே மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ககிசோ ரபாடா தனிப்பட்ட காரணத்தால் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக அர்ஷத் கான் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்" என்றார்.

டாஸ் முடிவில் தோல்வி அடைந்தது பற்றி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ரஜத் படிதார் பேசுகையில், "நாங்களும் முதலில் பந்து வீசவே நினைத்தோம். இது புதிய பிட்சாக உள்ளது. நிச்சயம் கடினமாக இருக்கும். போட்டி முடியும் வரை இதில் பெரிய மாற்றம் இருக்காது. எங்கள் ரசிகர்களை நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் எங்களுக்கு அளிக்கும் அன்பு மற்றும் ஆதரவு நிச்சயம் அளவிட முடியாததாக உள்ளது. எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.

Story first published: Wednesday, April 2, 2025, 19:07 [IST]
Other articles published on Apr 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+