Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஆர்சிபிக்கு மீண்டும் ஒரு பிரச்சினை.. கேகேஆர் எதிரான போட்டி நடைபெறுவதில் சிக்கல்

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் பாதியில் இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஐபிஎல் போட்டிகள் நாளை சனிக்கிழமை தொடங்குகிறது. 58 ஆவது லீக் ஆட்டத்தில் ஆர் சி பி, கொல்கத்தா அணிகள் பலப்பரிட்சை நடத்துகிறது.

இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. ஆர் சி பி அணியை பொறுத்தவரை புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 11 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளுடன் அந்த அணி உள்ளது.

KKR vs RCB

எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.கொல்கத்தா அணியை பொறுத்தவரை தற்போது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார்கள். எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே கிடைக்கும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும்.

இந்த நிலையில் இரு அணிகளும் இதுவரை 35 முறை மோதி இருக்கிறார்கள். இதில் ஆர்சிபி அணி 15 முறையும், கொல்கத்தா அணி 20 முறையும் வெற்றி பெற்று இருக்கிறது. கடைசியாக இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணி வென்றது.
இந்த நிலையில் பெங்களூருவில் கனமழை பெய்து வருகிறது. தினமும் மாலை நேரத்தில் மழை கொட்டி தீர்ப்பதால் நேற்று பயிற்சி செய்யக்கூட வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மைதானத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததால் அதில் ஆர்சிபி வீரர் டிம் டேவிட் ஓடி சென்று விளையாடி குழந்தை போல் நேரத்தை செலவழித்தார்கள்.இதனால் நாளை சனிக்கிழமையும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை வருகிறது. இதன் காரணமாக பெங்களூருவிலும் மழை தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.இதனால் ஆர் சி பி, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருந்துள்ளது. ஆர்சிபி அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்துவிடும் என்றாலும் முதல் இரண்டு இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் நாளைய போட்டி நடைபெறாமல் ஒரு புள்ளி மட்டும் வழங்கப்படும். இதனால் கொல்கத்தா அணியின் பிளே ஆப் வாய்ப்பு பறிப்போய் விடும்.

Story first published: Friday, May 16, 2025, 16:02 [IST]
Other articles published on May 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+