Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs RCB- ஆட்டம் மாறியதே இங்கு தான்.. அதிரடியாக விளையாடிய கொல்கத்தா தோற்றது எப்படி?

கொல்கத்தா : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கே கே ஆர் அணியும் கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணியும் பல பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் விராட் கோலி பேட்டிங்கிலும், குர்னல் பாண்டியா பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட ஆர் சி பி அணி 22 பந்துகள் எஞ்சிய நிலையில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. கே கே ஆர் அணியின் புதிய கேப்டனாக களமிறங்கிய ரஹானே 25 பந்துகளில் அரைசதம் அடித்து அணிக்கு நல்ல ஒரு தொடக்கத்தை கொடுத்தார். இதைப் போன்று சுனில் நரைனும் அதிரடியாக விளையாட இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது.

Krunal Pandya

குறிப்பாக கொல்கத்தா அணி 10 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்தது. இதனால் 200 ரன்களுக்கு மேல் கே கே ஆர் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அப்போதுதான் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இதை அடுத்து நான்கு ஓவர்களில் கே கே ஆர் அணி மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

பின்வரிசை வீரர்களும் சொதப்பியதால் கடைசி ஆறு ஓவர்களில் வெறும் 31 ரன்கள் மட்டுமே கே கே ஆர் அணி எடுத்தது. குறிப்பாக கே கே ஆர் அணியின் சூப்பர் ஸ்டார் ஆன ரிங்கு சிங் 10 ரன்களிலும் ஆண்ட்ரூ ரசில் 4 , ரிங்கு சிங் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கேகேஆர் அணியின் துணை கேப்டனான வெங்கடேஸ் ஐயரும் பேட்டிங்கில் சொதப்பி வெறும் 6 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. குறிப்பாக குர்னல் பாண்டியாவின் பந்துவீச்சில் தான் வெங்கடேஸ் ஐயர், ரிங்கு சிங்கும் ஆட்டம் இழந்தனர். அதேபோன்று கேகேஆர் அணியின் பேட்டர்களை பௌண்டரிகள் அடிக்க விடாமல் ஆர் சி பி வீரர்கள் பார்த்துக்கொண்டனர். ரமந்தீப், ரிங்கு சிங் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் சொதப்பியது கே கே ஆர் அணிக்கு சரிவை கொடுத்திருக்கிறது.

Story first published: Sunday, March 23, 2025, 1:27 [IST]
Other articles published on Mar 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+