Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs DC டாஸ் வென்றது யார்? கேப்டன்கள் சொன்னது என்ன? யாருக்கு சாதகம்?

டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி ,ஆர்சிபி அணிக்கு இடையிலான 46வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்சிபி அணி கேப்டன் ரஜட் பட்டிதார், முதலில் நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கின்றோம். ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கிறது என நினைக்கின்றேன்.

DC vs RCB

ஆடுகளம் பெரிய அளவு முதலில் மாறாது. மேலும் நாங்கள் சேஸ் செய்ய விரும்புகிறோம். நாங்கள் எங்கள் சொந்த மண்ணில் முதல் வெற்றியை பெற்றிருக்கிறோம். தொடர்ந்து நல்ல கிரிக்கெட் ஆடி வெற்றியை பெற முயற்சி செய்வோம். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பிரிவிலும் நாங்கள் முன்னேற்றம் காண விரும்புகிறோம்.

எனவே நாங்கள் தொடர்ந்து கற்று வருகின்றோம். பில் சால்ட்டுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பதில் ஜாக்கப் போத்தேல் களம் இறங்குகிறார் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் தற்போது டாசை நாங்கள் வென்றிருந்தால் நிச்சயம் அது சாதகமாக தான் எங்களுக்கு அமைந்திருக்கும்.

தற்போது நாங்கள் முதலில் பேட்டிங் செய்து விளையாட போகிறோம். அதன் பிறகு இரண்டாவது இன்னிங்சில் பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். கடைசியாக நாங்கள் இங்கு விளையாடிய போட்டியில் பனிப்பொழிவு இல்லை. ஆனால் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லேசான பனிப்பொழிவு இருந்தது.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். எனவே நான் பந்து வீசினேன். தற்போது நான் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றேன். நான் தொடர்ந்து நான்கு ஓவர்கள் வீச வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. தற்போது டுபிளசிஸ் அணிக்கு திரும்பிருக்கின்றார். இன்பாக்ட் வீரர் குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. சூழலுக்கு தகுந்தார் மாதிரியான முடிவை எடுப்போம் என்று அக்சர் பட்டேல் கூறினார்.

Story first published: Sunday, April 27, 2025, 19:36 [IST]
Other articles published on Apr 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+