For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: ஆர்சிபி ரசிகர்களுக்கு சோகமான செய்தி.. விராட் கோலியை இந்த வருசம் பார்க்க முடியாது

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் பல அதிரடி மாற்றங்களை சந்தித்தது யாருமே எதிர்பார்த்த வகையில் இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் போட்டி தொடங்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 நாட்கள் இடைவெளிக்கு பிறகு பி சி சி ஐ மீண்டும் போட்டிகளை அட்டவணையை மாற்றி அறிவித்தது.

இதில் ஆர்சிபி அணி பங்குபெறும் இரண்டு போட்டிகள் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த சனிக்கிழமை rcb கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த போட்டி கனமழை காரணமாக டாஸ் போடப்படாமல் கைவிடப்பட்டது.

RCB vs SRH

இந்த நிலையில் பெங்களூரில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலும் மழை பாதிப்பு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக ஒரு மே 23ஆம் தேதி ஆர்சிபி அணி தங்களது சொந்த மண்ணில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள இருந்தது.

ஆனால் மழை பாதிப்பு தொடரும் என கணிக்கப்பட்டிருப்பதால் தற்போது போட்டியை லக்னோவுக்கு பிசிசிஐ மாற்றி இருக்கிறது. இதன் மூலம் பெங்களூரில் இனி போட்டிகள் நடைபெறாது. சொந்த மண்ணில் ஆர்சிபி அணி எஞ்சிய போட்டிகளை விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மழையால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் ஆர் சி பி அணி வரும் 23 மற்றும் 27ஆம் தேதி சன்ரைசர்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிராக லக்னோ ஏக்னா மைதானத்தில் விளையாடப் போகிறது. இதனால் சன்ரைசர்ஸ் வீரர்கள் பெங்களூருக்கு வராமல் லக்னோவில் தங்கிக் கொள்ளுமாறு பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. இதேபோன்று ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று சந்ததிகார் மற்றும் அகமதாபாத்தின் நடைபெறும் என முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

குவாலிபயர் ஒன்று மே 29ஆம் தேதி மற்றும் மே 30ஆம் தேதி எலிமினேட்டர் சந்திக்கரிலும், குவாலிஃபயர் 2 ஜூன் ஒன்றாம் தேதி மற்றும் ஜூன் 3 இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் நடைபெற இருக்கிறது. ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் இறுதி போட்டி நடைபெற இருந்த நிலையில் தற்போது மைதானங்கள் மாற்றப்பட்டு இருக்கிறது.

Story first published: Tuesday, May 20, 2025, 23:25 [IST]
Other articles published on May 20, 2025
English summary
IPL 2025- RCB vs SRH Game moved out of Bengaluru due to heavy rain
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+