Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி-யின் அசுர வளர்ச்சி.. எந்த அணியும் செய்யாத பிரம்மாண்ட ஐபிஎல் சாதனையை செய்த பெங்களூர் அணி

பெங்களூர்: ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத பிரம்மாண்டமான சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஆண்டு படைத்துள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆட்டம் வேறு மாதிரியாக இருந்தது. புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த அந்த அணி லீக் சுற்றின் முடிவில் இரண்டாம் இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

குறிப்பாக, தங்களின் சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தை விட, மற்ற அணிகளின் சொந்த மைதானங்களில் ஆடிய போட்டிகளில், அதாவது வெளி மைதான போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்றது. இந்த ஆண்டு, ஒவ்வொரு அணியும் ஏழு சொந்த மைதானப் போட்டிகளிலும், ஏழு வெளி மைதானப் போட்டிகளிலும் விளையாடின.

IPL 2025 RCB s Historic Away Record First Team to Win All Away League Matches

அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் விளையாடிய ஏழு வெளி மைதானப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. கடைசியாக, நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக லக்னோ மைதானத்தில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் 227 ரன்கள் என்ற இலக்கை 18.4 ஓவர்களில் எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம், இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய ஏழு அணிகளுக்கு எதிராக அந்த அணிகளின் சொந்த மைதானங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு முன், எந்த ஒரு அணியும் தான் ஆடிய அனைத்து வெளி மைதானப் போட்டிகளிலும் வெற்றி பெற்றதில்லை. அதிகபட்சமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 2012 ஆம் ஆண்டு தாங்கள் விளையாடிய எட்டு வெளி மைதானப் போட்டிகளில் ஏழு வெற்றிகளைப் பெற்றன. 2023 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி தான் விளையாடிய ஏழு வெளி மைதானப் போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எந்த ஐபிஎல் அணியும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்த அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத நிலையில், இது போன்ற சாதனைகளை இந்த ஆண்டு செய்திருப்பதால், இந்த ஆண்டு கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அந்த அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், அந்த அணி பிளே ஆஃப் சுற்றில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Story first published: Wednesday, May 28, 2025, 8:34 [IST]
Other articles published on May 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+