Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: தோனிக்காக தான் சிஎஸ்கே வீரர்கள் மெதுவாக விளையாடுகிறார்களா? வெளிவந்த உண்மை

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய எட்டு போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 10 ஆம் இடத்தில் இருக்கிறது. இந்த சூழலில் சிஎஸ்கே அணி எஞ்சிய போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி தோற்பதற்கு காரணம் பவர் பிளேவில் வீரர்கள் பெரிய ஷாட் ஆடுவது இல்லை. அது மட்டும் இல்லாமல் நடப்பு தொடரிலே பவர்பிளேவில் குறைவான ரன்களை அடித்த அணி என்ற சோகமான சாதனையையும் சிஎஸ்கே தான் படைத்திருக்கிறது.

CSK

இந்த நிலையில் தான் சிஎஸ்கே அணி ஏன் மெதுவாக விளையாடுகிறார்கள் என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தோனி தற்போது விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் விளையாடி வருகிறார். ஆனால் தோனியின் முட்டி பகுதியில் காயம் இருக்கிறது. அவரால் தொடர்ந்து 20 ஓவர் பேட்டிங் செய்ய முடியாது.

இதனை ஏற்கனவே பிளமிங் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனால் தோனி கடைசி சில ஓவர் எஞ்சிருக்கும் போது தான் பேட்டிங் செய்ய வருகிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணி வீரர்கள் பந்தை தூக்கி அடித்து ஷாட் ஆடி கேட்ச் ஆனார்கள் என்றால் விக்கெட் இழக்க நேரிடும். இதன் மூலம் தோனி விரைவாக பேட்டிங் செய்ய களத்திற்கு வரும் சூழல் வந்துவிடும்.

அது தோனியால் முடியாது. இதன் காரணமாக தோனியை பாதுகாப்பதற்காக தான் சிஎஸ்கே அணியில் முன்வரிசை வீரர்கள் மெதுவாக விளையாடுங்கள் என்று பயிற்சியாளர்களால் வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மற்ற அணி வீரர்கள் எல்லாம் பெரிய சாட் ஆடி ரன்கள் சேர்க்கும் போது, சிஎஸ்கே அணி மட்டும் டெக்ஸ்ட் புக் ஷாட்டுகள் ஆடுகிறது.

இந்த ஷாட் ஆடுவதன் மூலம் ரன் குறைவாக வந்தாலும் விக்கெட்டுகள் விழாது. இப்படி ரிஸ்க் இல்லாமல் விளையாடினால் தோனி பேட்டிங் செய்ய வரும்போது இரண்டு ஓவர்கள் எஞ்சி இருக்கும். இதன் காரணமாகத்தான் சிஎஸ்கே அணி வீரர்கள் மெதுவாக விளையாடுங்கள் என வற்புறுத்தப்படுவதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Tuesday, April 22, 2025, 22:01 [IST]
Other articles published on Apr 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+