மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான எஞ்சியப் போட்டிகள் வரும் மே 17ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கும் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுபோன்று மே 25ஆம் தேதி நடைபெற இருந்த இறுதிப்போட்டி தற்போது ஜூன் மூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று பெங்களூர்,ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, அகமதாபாத் ஆகிய ஆறு மைதானங்களில் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மே 17ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7:30 மணிக்கு ஆர்சிபி அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பல பரிட்சை நடத்துகிறது.

மே 18ஆம் தேதி மதியம் மூன்று முப்பது மணிக்கு ராஜஸ்தான் பஞ்சாப் அணியும், இரவு ஏழு முப்பது மணிக்கு டெல்லி குஜராத் அணியும் பல பரிட்சை நடத்துகிறது. மே 19ஆம் தேதி மாலை 7:30 மணிக்கு லக்னோ, சன்ரைசர்ஸ் அணியும், மே 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 7:30 மணிக்கு சென்னை, ராஜஸ்தான் அணியும் டெல்லியில் மோதும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த போட்டி முன்னதாக சேப்பாக்கத்தில் நடைபெற இருந்த நிலையில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. மே 21ஆம் தேதி புதன்கிழமை மாலை 7 மணிக்கு மும்பை டெல்லி அணிகள் பலப் பரிட்சை நடத்துகிறது. மே 22ஆம் தேதி குஜராத், லக்னோ அணிகளும், மே 23ஆம் தேதி ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணியும் மோதுகிறது. மே 24ஆம் தேதி பஞ்சாப், டெல்லி அணியும், மே 25ஆம் தேதி மதியம் 3:30 மணிக்கு குஜராத், சென்னை அணிகள் அகமதாபாத்தில் மோதுகிறது.
இதைத் தொடர்ந்து மாலை ஏழு முப்பது மணிக்கு சன்ரைசர்ஸ், கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. மே 26 ஆம் தேதி பஞ்சாப், மும்பை அணியும் மே 27ஆம் தேதி லக்னோ ஆர்சிபி அணியும் மோதுகிறது. இத்துடன் லீக் சுற்று முடிவடைகிறது. இதனை அடுத்து மே 29ஆம் தேதி முதல் குவாலிஃபயர் சுற்று நடக்கிறது. மே 30ஆம் தேதி எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. ஜூன் ஒன்றாம் தேதி குவாலிஃபையரும், ஜூன் மூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது ப்ளே ஆப் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.